/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
செய்திகள்
/
மணல் வாங்காமல் சுவர்களுக்கு பூச்சு வேலை மேற்கொள்ளலாம்!
/
மணல் வாங்காமல் சுவர்களுக்கு பூச்சு வேலை மேற்கொள்ளலாம்!
மணல் வாங்காமல் சுவர்களுக்கு பூச்சு வேலை மேற்கொள்ளலாம்!
மணல் வாங்காமல் சுவர்களுக்கு பூச்சு வேலை மேற்கொள்ளலாம்!
ADDED : டிச 27, 2025 07:36 AM

வீட்டுக்கான கட்டுமான பணியில் துாண்கள், பீம்கள், மேல்தளம் ஆகிய வற்றுக்கு கம்பிகள் கட்டி, தாங்கும் பலகைகள் அல்லது தடுப்புகள் அமைத்து கான்கிரீட் போடும் பணிகள் நடக்கும். இதில் துாண்கள், தளங்கள் போன்றவற்றுக்கு எத்தகைய கான்கிரீட் பயன் படுத்த வேண்டும் என வரையறை உள்ளது.
இதன்படி தேசிய அளவிலான கட்டுமான தர கட்டுப்பாட்டு விதிகளில் பரிந்துரைத்த வகை கான்கிரீட்டை பயன்படுத்த வேண்டும். ஆனால், மேனுவல்முறையில் ஜல்லி, மணல், சிமென்ட் வாங்கி கலந்து தயாரிக்கப்படும் கான்கிரீட் கலவையில், இதை எப்படி உறுதி செய்ய முடியும் என்ற கேள்வி எழும்.
இந்நிலையில், சமீப காலமாக ரெடிமிக்ஸ் ஆலைகள் அதிகரித்துள்ள நிலையில், உரிய தர கட்டுப்பாடு வழி முறைகளுக்கு உட்பட்டு கான்கிரீட் கலவை வாங்க முடியும். துாண்கள், பீம்கள், மேல் தளம் ஆகியவற்றுக்கு ஆலைகளில் இருந்து தரமான கான்கிரீட்டை வாங்கி பயன்படுத்தலாம்.
ஆனால், சுவர் கட்டுவது, பூச்சு வேலை ஆகியவற்றுக்கு தேவையான தரமான கலவை தயாரிப்பதில் இன்றும் பிரச்னை நிலவுகிறது. இதில் ஆற்று மணல் அரிதாகி, எம். சாண்ட் பயன்பாடு அதிக அளவில் பயன்படுத்தும் நிலையில் மக்கள் குழப்பம் அடைந்து உள்ளனர்.
குறிப்பாக, சுவர் கட்டும் வேலைக்கு வாங்கப்படும் எம் சாண்ட்டை பூச்சு வேலைக்கு எப்படி பயன்படுத்துவது என்ற கேள்வி எழுகிறது. இதற்கு விடையாக, குறிப்பிட்ட சில புதிய வகை பொருட்கள் அறிமுகமாகி, கட்டுமான துறையினர் இடையே வரவேற்பை பெற்றுள்ளது. இந்த வகையில் சிமென்ட், பைபர், பி.சாண்ட் சேர்த்து தயாரிக்கப்பட்ட உலர் கலவை தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. சிமென்ட் மூட்டை போன்று, 25 கிலோ, 50 கிலோ மூட்டைகளில் இந்த உலர் கலவை பவுடர்கள் தற்போது விற்பனை செய்யப்படுகின்றன.
இவற்றை வாங்கி, பிரித்து தரையில் கொட்டி அதில் தேவையான தண்ணீரை மட்டும் சேர்த்தால் போதும் பூச்சு வேலைக்கு தேவையான பக்குவத்தில் கலவை தயாராகிவிடும். இந்த கலவையை பூச்சு வேலைக்கு பயன்படுத்துவது எளிதாக அமைந்துள்ளது.
சுவரில் நன்றாக ஒட்டிக்கொள்வதுடன் விரைவாக கியூரிங் முடிந்து அடுத்த வேலைக்கு சுவர் தயாராகிவிடும் என்பது இதன் சிறப்பாக கூறப்படுகிறது.
இது மட்டுமல்லாது, வழக்கமாக மேனுவல் முறையில் தயாரிக்கப்படும் கலவையை பயன்படுத்தும் போது ஏற்படும் விரிசல்கள் பிரச்னையும் இதில் தவிர்க்கப்படுகிறது.
பூச்சு வேலைக்கு ஆற்று மணல் கிடைக்காத நிலையில் பி.சாண்ட் வாங்குவதற்கு அல்லாடும் நிலையில் இருக்கும் மக்களுக்கு இந்த பொருள் பேருதவியாக அமையும். இதை பயன்படுத்துவதால் தரமான முறையில் பூச்சு வேலை எளிதாக முடிகிறது என்கின்றனர் கட்டுமான துறை வல்லுனர்கள்.
சுவர் கட்டும் வேலைக்கு வாங்கப்படும் எம். சாண்ட்டை, பூச்சு வேலைக்கு பயன்படுத்தலாமா என்பதில் ஏற்படும் குழப்பத்தால் மக்கள் ஆற்று மணலை தேடி அலைகின்றனர்.

