/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
சிறப்பு கட்டுரை
/
'சன்ஷேட்'களை தவிர்த்தால் கட்டடத்துக்கு ஏற்படும் பாதிப்புகள் என்ன?
/
'சன்ஷேட்'களை தவிர்த்தால் கட்டடத்துக்கு ஏற்படும் பாதிப்புகள் என்ன?
'சன்ஷேட்'களை தவிர்த்தால் கட்டடத்துக்கு ஏற்படும் பாதிப்புகள் என்ன?
'சன்ஷேட்'களை தவிர்த்தால் கட்டடத்துக்கு ஏற்படும் பாதிப்புகள் என்ன?
ADDED : செப் 07, 2024 12:13 PM

புதிதாக நாம் கட்டும் வீட்டில் நல்ல காற்றோட்டம் இருக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு இடங்களில் ஜன்னல்கள் அமைப்பது வழக்கம். இவ்வாறு ஜன்னல்கள் அமைக்கும் போது வெளிப்புறத்தில் அதன் வழியே மழைக்காலத்தில் சாரல் பாதிப்புகள் வர கூடாது.
குறைந்த பரப்பளவு மனை வைத்து இருப்போர் அதில் வீடு கட்டும் போது வெளிப்புறத்தில் போதிய அளவுக்கு காலி நிலம் விடுவதில்லை. இதனால், ஜன்னல் அமைக்கும் போது பல்வேறு நடைமுறை சிக்கல்கள் ஏற்படுவதால் பலரும் இத்தகைய கட்டடங்களில் ஜன்னல்களை தவிர்க்கின்றனர்.
கட்டடங்கள் கட்டும் போது, ஒவ்வொரு பகுதியும் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு பாரம்பரியமாக சில வழிமுறைகள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன.
இதன்படி, வீட்டில் காற்றோட்டத்தை உறுதி செய்ய ஒரு அறைக்கு குறைந்தபட்சம் இரண்டு இடங்களில் ஜன்னல்கள் அமைக்க வேண்டும். இவ்வாறு ஜன்னல்கள் அமைப்பதால், கதவு வழியாக உள்ளே வரும் காற்று வெப்ப நிலை உயர்ந்து வெளியேறுவதற்கு ஜன்னல்கள் பேருதவியாக இருக்கும்.
இதற்காக ஜன்னல்கள் அமைக்கப்படுகிறது என்றாலும், மழைக்காலத்தில் ஜன்னல்கள் அமைந்த இடங்கள் வழியே ஈரம் வீட்டுக்குள் வர வாய்ப்புள்ளது.
இது மட்டுமல்லாது, மரம், இரும்பு போன்ற பொருட்களால் அமைக்கப்படும் ஜன்னல்கள் ஈரத்தால் தாக்கப்படும் போது பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும். இதனால் மழை நீர் ஜன்னல்கள் மேல் விழாமல் இருக்க, அதன் மேற்பகுதியில் சன்ஷேட்கள் அமைப்பது அவசியமாகிறது.
பொதுவாக, கட்டடத்தில் ஜன்னல்களின் வெளிப்புறத்தில் மழை நீர் தடுப்புக்காக சஜ்ஷேட்கள் அமைக்கும் நிலையில் அதன் நீளம், அகலம் போன்ற விஷயங்களில் தெளிவாக செயல்பட வேண்டும். கட்டடத்தில் லின்டல் பீம் அமைக்கும் போது, எந்தெந்த இடங்களில் சன்ஷேட்கள் வரும் என்பதை முடிவு செய்ய வேண்டும்.
லிண்டல் பீம் அமைப்பதற்கான கம்பி கட்டும் பணியின் ஒரு பகுதியாக, சன்ஷேட்களுக்கும் கம்பி கட்டும் வேலையை முடிக்க வேண்டியது அவசியம். லின்டல் பீம்களுக்கான கம்பி கூடுகளின் நீட்சியாக சன்ஷேட்களுக்கான கம்பி கூடுகளை அமைப்பது அவசியம்.
சுவரில் இருந்து குறைந்தபட்சம், 1.5 அடி நீளம் வரை சன்ஷேட்கள் அமைக்கப்படுவது அவசியம் என்ற கருத்து பரவலாக உள்ளது.
இதில், ஜன்னல் பிரேம்களின் அகலத்தை விட ஓரிரு அங்குலம் கூடுதலாக இருக்கும் வகையில் சன்ஷேட் ஸ்லாப்கள் இருப்பதை உறுதி செய்வது அவசியம்.
சில இடங்களில் ஸ்லைடிங் டோர் அமைப்பதாக கூறி, வெளிப்புறத்தில் சன்ஷேட்களை தவிர்க்கின்றனர். இவ்வாறு செய்வதால், கட்டடம் மழை நீரால் பாதிக்கப்படும் நிலை ஏற்படும் என்கின்றனர் கட்டுமான துறை பொறியாளர்கள்.