தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/கனவு இல்லம்/சிறப்பு கட்டுரை/ வீடு கட்டும் போது அடிப்படை வசதிகள் விஷயத்தில் கவனம் தேவை!

 வீடு கட்டும் போது அடிப்படை வசதிகள் விஷயத்தில் கவனம் தேவை!

 வீடு கட்டும் போது அடிப்படை வசதிகள் விஷயத்தில் கவனம் தேவை!


ADDED : ஆக 22, 2026 07:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 22, 2026 07:14 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதிதாக வீடு கட்டும் போது அதில் அஸ்திவாரம், துாண்கள் போன்ற பாகங்கள் உறுதியாக இருக்க வேண்டும் என்பதற்காக மக்கள் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கின்றனர். இதற்கு அப்பால், சுவர்கள் போன்ற விஷயங்களும் சரியாக அமைய வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது.

கட்டடம் உறுதியாக நிற்க வேண்டும் என்பதற்காக, அடிப்படை பாகங்கள் கட்டுமானத்தில் கவனமாக இருப்பது நல்லது தான். அதே நேரத்தில், அந்த கட்டடத்தை பயன்படுத்தும் போது தேவைப்படும் அடிப்படை வசதிகள் விஷயத்திலும் கவனமாக இருக்கனும்.

ஒரு கட்டடத்தை கட்டும் போது, அதற்கான வரைபடம் தயாரிக்கும் போதே, அடிப்படை வசதிகள் விஷயத்தையும் கவனிக்கனும். குறிப்பாக ஒரு வீட்டில் வரவேற்பு அறை, சமையலறை, படுக்கை அறை ஆகியவை எங்கு அமைய வேண்டும் என்று மக்கள் பார்க்கின்றனர்.

இந்த அறைகளுக்கான நுழைவாயில் எங்கு எப்படி அமைய வேண்டும் என்பதிலும் கவனமாக இருக்க வேண்டும். வீட்டின் பிரதான தலைவாசலில் அல்லது வரவேற்பு அறையில் இருந்து பார்த்தால், படுக்கை அறை, சமையலறை ஆகியவற்றின் உட்புற பகுதிகள் தெரிய கூடாது.

வரைபட தயாரிப்பு நிலையில் இந்த விஷயத்தை தெரிவித்தால் தான், வடிவமைப்பாளர் அதற்கான வசதியை செய்வார். இதே போன்று, படுக்கை அறை, சமையலறை, குளியலறை ஆகியவற்றுக்கான கதவுகள் வெளிப்புறம் திறக்கும்படி அமைக்காதீர்.

இந்த அறைகளின் கதவுகள் உட்புறமாக திறக்கும் வகையில் மட்டுமே அமைய வேண்டும் என்று கூறப்படுகிறது. இது மட்டுமல்லாது, வீட்டில், தண்ணீர் வினியோகம், கழிவுநீர் வடிகால், மின்சார இணைப்பு ஆகியவற்றுக்கான வழித்தடங்கள் முறையாக அமைய வேண்டும்.

ஒரு வீடு கட்டுவதனால், அங்கு தண்ணீர் வசதி எப்படி உள்ளது என்பது தொடர்பான விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்கனும். குறிப்பாக, கிணறு அல்லது போர்வெல்லில் தட்டுப்பாடு இன்றி தண்ணீர் கிடைத்தால் அதற்கு ஏற்றபடி குழாய் இணைப்புகளை அமைக்கலாம்.

போர்வெல்லில் இருந்து தண்ணீர் எடுத்து நேரடியாக மேல் நிலை தொட்டிக்கு ஏற்றுவதா அல்லது கீழ்நிலை தொட்டியில் நிரப்பி அதன் பின் மேல் நிலை தொட்டிக்கு ஏற்றுவதா என்பதை திட்டமிட வேண்டும். இதே போன்று அந்த பகுதியில் பாதாள சாக்கடை வசதி இல்லாவிட்டால் செப்டிக் டேங்க் அமைக்க வேண்டும்.

இதே போல், புதிய வீட்டுக்கான மின்சார இணைப்புகளை அமைப்பதிலும் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும். இதில் செலவு அதிகரிக்குமே என்று பார்க்காமல், ஆரம்பத்திலேயே மும்முனை மின்சார இணைப்புகளை பெறுவது நல்லது.

தெருவில் உள்ள கம்பத்தில் இருந்து வீட்டுக்கு வரும் மின்சார இணைப்பு கேபிள்களை, தரையில் புதைவடிவ முறையில் அமைத்து கொண்டுவருவது நல்லது. இதனால், எதிர்காலத்தில் பல்வேறு வகையான பிரச்னைகள் ஏற்படுவதை தவிர்க்க வழி கிடைக்கும் என்கின்றனர் கட்டுமான பொறியாளர்கள்.

போர்வெல்லில் இருந்து தண்ணீர் எடுத்து நேரடியாக மேல் நிலை தொட்டிக்கு ஏற்றுவதா அல்லது கீழ்நிலை தொட்டியில் நிரப்பி அதன் பின் மேல் நிலை தொட்டிக்கு ஏற்றுவதா என்பதை திட்டமிட வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us