தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/கனவு இல்லம்/சிறப்பு கட்டுரை/ கட்டுமான பணிகளுக்கு தேவையான தண்ணீரை பெறுவதில் கவனமாக இருங்கள்!

 கட்டுமான பணிகளுக்கு தேவையான தண்ணீரை பெறுவதில் கவனமாக இருங்கள்!

 கட்டுமான பணிகளுக்கு தேவையான தண்ணீரை பெறுவதில் கவனமாக இருங்கள்!


ADDED : பிப் 07, 2026 08:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 07, 2026 08:13 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பொதுவாக காலிநிலம் வாங்கி அதில் வீடு கட்ட திட்டமிடுவோர், சில அடிப்படை விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். கட்டுமான பணிக்கான அஸ்திவாரம் அமைக்கும் முன், அங்கு தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வதற்கான வசதியை ஏற்படுத்த வேண்டும்.

ஒரு நிலத்தில் வீடு கட்டும் பணிகளை துவக்குவதற்கு முன் அங்கு தண்ணீர் வசதிக்காக கிணறு அல்லது போர்வெல் அமைப்பது அவசியம். இதே போன்று கட்டுமான பணிகளை துவக்கும் முன், தற்காலிக மின்சார இணைப்பையும் வாங்குவது அவசியம்.

நிலத்தை மேம்படுத்தி அதில் அஸ்திவாரம் அமைக்கும் பணிக்கான பூஜை போடும் முன் இந்த விஷயங்கள் தயாராக இருக்க வேண்டும். வெளியில் இருந்து தண்ணீர் வாங்கி கொள்ளலாம், பக்கத்து வீட்டில் இருந்து மின்சார வசதியை பயன்படுத்தலாம் என்று நினைக்காதீர்.

சமீப காலமாக வீடுகளுக்கு திறந்தவெளி கிணறு தோண்டுவது என்ற பழக்கம் வெகுவாக குறைந்துவிட்டது. அதற்கு பதிலாக போர்வெல் எனப்படும் ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கும் பழக்கம் மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

நகர்ப்புறப்பகுதிகளில் நடுத்தர மற்றும் குறைந்த வருவாய் பிரிவு மக்கள் குறைந்த பரப்பளவு மனைகளை வாங்கக்கூடிய சூழல் நிலவுவதே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. குறைந்த பரப்பளவு மனையில் கிணறுக்கு குறிப்பிட்ட அளவு நிலம் பயன்படுத்தப்பட்டால், அதனால் கட்டடத்துக்கான நிலம் குறையும்.

இந்த காரணத்தால், திறந்தவெளி கிணறு தோண்டுவதை தவிர்த்து மக்கள் போர்வெல் அமைக்கின்றனர். குறிப்பாக, திறந்தவெளி கிணறுகளை 50 அடி ஆழம் வரை அதிகபட்சமாக தோண்ட முடியும் என்ற நிலையில், 200 முதல், 300 அடி ஆழத்துக்கு போர்வெல் அமைக்க முடிகிறது.

உங்களுக்கான புதிய வீட்டு கட்டுமான பணிகளை துவக்கும் முன் அதற்கு தேவையான தண்ணீர் கிடைப்பதற்கான வசதியை முதலில் ஏற்படுத்த வேண்டும். போர்வெல் அமைப்பதுடன் அதில் இருந்து தண்ணீர் எடுப்பதற்கான மோட்டார்களை இயக்க தற்காலிக மின்சார இணைப்பை பெற வேண்டியது அவசியம்.

போர்வெல் அமைக்கும் போது அதற்கான இடத்தை தேர்வு செய்வதில் நீரோட்டம் குறித்து அறிய வேண்டியது அவசியம். இதில் கிடைக்கும் தண்ணீர் பயன்பாட்டுக்கு ஏற்ற நிலையில் இருக்கிறதா என்பது போன்ற விஷயங்களிலும் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்கின்றனர் கட்டுமான துறை பொறியாளர்கள்.

கட்டுமான பணிகளை துவக்கும் முன், அதற்கு தேவையான தண்ணீர் கிடைக்க போர்வெல் அமைப்பதுடன், அதில் இருந்து தண்ணீர் எடுப்பதற்கான மோட்டார்களை இயக்க தற் காலிக மின்சார இணைப்பை பெற வேண்டியது அவசியம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us