/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
சிறப்பு கட்டுரை
/
வீட்டுக்கு தேவையான அலங்கார விளக்குகளை வாங்குவதில் கவனம் தேவை
/
வீட்டுக்கு தேவையான அலங்கார விளக்குகளை வாங்குவதில் கவனம் தேவை
வீட்டுக்கு தேவையான அலங்கார விளக்குகளை வாங்குவதில் கவனம் தேவை
வீட்டுக்கு தேவையான அலங்கார விளக்குகளை வாங்குவதில் கவனம் தேவை
ADDED : நவ 25, 2024 10:03 AM

புதிதாக வீடு கட்டும் போது அதன் உறுதி சார்ந்த பல்வேறு விஷயங்களில் மக்கள் கூடுதல் கவனம் செலுத்த துவங்கியுள்ளனர். இந்நிலையில், அதன் அழகு சார்ந்த விஷயங்களிலும் மக்கள் தற்போது அதிகமாக கவனம் செலுத்தி, அதற்கான பொருட்களை தேட துவங்கியுள்ளனர்.
சில ஆண்டுகளுக்கு முன்புவரை அலுவலகங்கள், வணிக பகுதிகளில் தான் கட்டடங்களின் உள் அலங்கார விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
ஆனால், தற்போது, சாதாரண முறையில் கட்டப்படும் வீடுகளிலும் உள் அலங்காரம் சார்ந்த விஷயங்களில் மக்கள் கவனம் செலுத்துகின்றனர்.
குறிப்பாக, புதிய வீட்டின் வெளிப்புற தோற்றம் எப்படி இருக்க வேண்டும் என்பதிலும், அதில் எந்த இடத்தில் எத்தகைய விளக்குகள் இருக்க வேண்டும் என்பதற்கான தேடலும் அதிகரித்துள்ளது.
இதே போன்று வீட்டின் உட்புறத்தில் ஒவ்வொரு அறையிலும் அலங்கார விளக்குகள் விஷயத்தில் மக்களின் ஆர்வம் அதிகரித்துள்ளது.
பொதுவாக, வீடுகள் என்றால் ஒவ்வொரு அறையிலும் ஒரு டியூப் லைட், ஒரு குண்டு பல்பு லைட் இருந்தால் போதும் என்று தான் மக்கள் நினைத்தனர்.
இது தற்போது மாறியுள்ளது. வீட்டினுள், அறைகளில் அலங்கார விளக்குகள் பல்வேறு வண்ணங்களில் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அறைகளில், பிரதானமாக வெளிச்சத்துக்கு குறிப்பிட்ட சில விளக்குகள் அமைப்பது அடிப்படை தேவை. இது போன்ற அடிப்படை தேவையாக உள்ள விளக்குகள் அமைப்பதில் எவ்வித சமரசமும் செய்து கொள்ள வேண்டாம் என்பது பலரது பரிந்துரையாக உள்ளது.
இந்த அடிப்படை விளக்குகளுக்கு அடுத்த நிலையில் தான் அலங்கார விளக்குகள் அமைப்பது வருகிறது. இதில் கட்டடத்தின் உட்புறத்தில் பால் சீலிங் அமைப்பு. அதில் அலங்கார விளக்குகள் அமைப்பதா, அல்லது கட்டடத்தின் கான்கிரீட் தளத்திலேயே இதற்கான வசதியை ஏற்படுத்துவதா என்பதை முடிவு செய்யுங்கள்.
வணிக நிறுவனங்களில் உள்ளது போன்று வீடுகளில் பால்சீலிங் அமைத்தால் அழகாக இருக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால், வணிக நிறுவனங்கள் அளவுக்கு வீட்டின் உட்புற பகுதிகளை பராமரிப்பதிலும், பயன்படுத்துவதிலும் கூடுதல் கவனம் செலுத்த முடியுமா என்பதை பாருங்கள்.
உங்கள் வீட்டில் அலங்கார விளக்குகள் அமைப்பது என்று முடிவு எடுத்த நிலையில், அறையின் சூழலுக்கு ஒத்துவரும் வகையிலான விளக்குகளை தேர்வு செய்வதில் கவனமாக இருக்க வேண்டும். இதில் சிலர் ஆன்லைன் முறையில் அலங்கார விளக்குகளை தேர்வு செய்கின்றனர்.
இவ்வாறு ஆன்லைன் முறையில் வாங்கும் விளக்குகளில் பாதுகாப்பு மற்றும் தர சான்று தொடர்பான விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
குறிப்பாக, இது போன்ற விளக்குகளை வாங்குவதைவிட அதை எப்படி பொருத்துவது என்பதற்கான வழிமுறையை அறிந்தவர்கள் இருப்பது அவசியம் என்கின்றனர் உள் அலங்கார வல்லுனர்கள்.