/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
சிறப்பு கட்டுரை
/
பழைய செங்கற்களை கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தாதீர்!
/
பழைய செங்கற்களை கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தாதீர்!
பழைய செங்கற்களை கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தாதீர்!
பழைய செங்கற்களை கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தாதீர்!
ADDED : மே 10, 2025 07:34 AM

எப்படியாவது சொந்த வீடு கட்டி குடியேற வேண்டும் என்ற எண்ணத்தில் மக்கள் பல்வேறு வகையான முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். குறிப்பாக, வீடு கட்டும் பணிக்கு யாரை எப்படி அணுகுவது என்பதிலேயே மக்களுக்கு பல்வேறு குழப்பங்கள்ஏற்படுகின்றன.
சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்ற உங்கள் எண்ணத்தை காகிதங்களுக்கு கொண்டு வருவதில் குறிப்பிட்ட சில வல்லுனர்களின் ஒத்துழைப்பு தேவை. காகித வடிவில் இருந்து அதை நிஜத்துக்கு கொண்டு வருவது என்பதில் தான் பொறியாளர்கள், பணியாளர்களின் பங்கு உள்ளது.
இதில் புதிய வீட்டுக்கான சுவர்கள் எழுப்ப எதை பயன்படுத்த வேண்டும் என்பதை ஆரம்ப நிலையிலேயே முடிவு செய்ய வேண்டும். இந்த விஷயத்தில் நீண்டகாலமாக களிமண்ணை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்படும் செங்கற்களை தான் பயன்படுத்த வேண்டும் என்று மக்கள் நினைக்கின்றனர்.
சமீப காலமாக சுவர் கட்டுவதற்கு பல்வேறு வகை புதிய பொருட்கள் வந்துள்ளன. இதனால், ஹாலோ பிளாக், சாலிட் பிளாக், எரிசாம்பல் கற்கள் போன்ற பொருட்கள் வந்துள்ள நிலையில் அவற்றை பயன்படுத்தி சுவர் கட்டும் வேலை மேற்கொள்ளப்படுகிறது.
அதே நேரத்தில் பாரம்பரிய ரீதியில் தயாரிக்கப்படும் செங்கல் பயன்பாடு இன்னும் குறையாமல் உள்ளது. உங்கள் வீட்டுக்கான கட்டுமான பணிக்கு செங்கல் வாங்கும் போது மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும், தரம் சார்ந்த விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
உங்கள் வீட்டு கட்டுமான பணிக்கு கொண்டு வந்து இறக்கப்படும் செங்கற்களின் ஓரங்கள், வண்ணம் ஆகிய விஷயங்களை துல்லியமாக கவனிக்க வேண்டும். சில சமயங்களில் நீங்கள் வாங்கிய புதிய செங்கல் பயன்படுத்தி முடிந்த நிலையில் அந்த நாளில் முடிக்க வேண்டிய பணிக்கு, 50 அல்லது, 100 செங்கல் தேவைப்படும் நிலை ஏற்படும்.
இது போன்ற சமயத்தில் அன்றைக்கான பணிகளை முடிக்க வேண்டும் என்ற உந்துதலில், அக்கம் பக்கத்தில் யாராவது வைத்திருக்கும் பழைய செங்கற்களை பயன்படுத்தும் போக்கு காணப்படுகிறது. அக்கம் பக்கத்தில் யாராவது தங்கள் பணிக்கு வாங்கிய லோடில், 100 கற்கள் மிச்சம் இருக்கலாம்.
அதை குறைந்த விலையில் கிடைக்கிறது என்று வாங்கி, அவசர தேவைக்கு பயன்படுத்துவதால், கட்டடத்துக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது. விலை குறைவு என்பதற்காக தரம் குறைந்த பழைய செங்கற்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று தொடர்ந்து பரிந்துரைக்கப்படுகிறது.
பொதுவாக செங்கல் தயாரிக்கப்பட்ட நாளில் இருந்து குறுகிய காலத்தில் பயன்படுத்த வேண்டும். நாள் ஆக, அதன் வலு குறையும் நிலையில் அதை பயன்படுத்தும் நிலையில் கட்டடத்தின் உறுதி பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்கின்றனர் கட்டுமான துறை வல்லுனர்கள்.