/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
சிறப்பு கட்டுரை
/
காற்றும், வெளிச்சமும் கட்டடத்தில் இருந்தால் கரையானை ஒரு கை பார்த்து விடலாம்
/
காற்றும், வெளிச்சமும் கட்டடத்தில் இருந்தால் கரையானை ஒரு கை பார்த்து விடலாம்
காற்றும், வெளிச்சமும் கட்டடத்தில் இருந்தால் கரையானை ஒரு கை பார்த்து விடலாம்
காற்றும், வெளிச்சமும் கட்டடத்தில் இருந்தால் கரையானை ஒரு கை பார்த்து விடலாம்
ADDED : நவ 07, 2025 09:16 PM

எவ்வளவுதான் கட்ட டத்தை சிரத்தை எடுத்து, பாதுகாப்பாக கட்டினாலும் அதனையும் மீறி நம் கட்டடத்தை தாக்கும் ஒரு ஜீவன் உள்ளது என்றால் அது கரையான்தான்.
மழை, வெப்பம், நீர், காற்று, துாசி, நீர் தேக்கம், சரியான பராமரிப்பின்மை, ஒவ்வொரு பணிக்கும் தக்க கால அவகாசம் இல்லாதது போன்ற காரணங்களால், கட்டடங்களுக்கு பாதிப்பு ஏற்படலாம்.
இவற்றுக்கு உயிர் கிடையாது. ஆனால், உயிர் உள்ள ஜீவனான கரையான் நமது விலை உயர்ந்த பொருட்களை அழிக்கக்கூடிய வல்லமை கொண்டுள்ளது. குறிப்பாக, மரம், பிளைவுட், அலங்கார மரப்பொருட்கள், நிலக்கதவுகளை தாக்கும். இந்த பாதிப்பு உடனே நமது கண்களுக்கு தெரியாது.
சம்பந்தப்பட்ட பொருட்கள் முற்றிலும் அழிக்கப்பட்ட பிறகுதான் கரையான் புலப்படும். கரையான் அழிப்பு என்பது ஒரு பொருளை சிதைக்கும் செயல். முழுவதும் முடியாமல் அதனை விட்டு விலகாது; நமக்கும் தெரியாது.
கரையான்கள் கட்டடத்தில் உள்ள சிறு துவாரங்கள், வெடிப்புகள், ஜன்னல்கள், கதவுகள் , மின் ஒயர் பாதைகளில், பைப் லைன்கள் வாயிலாக பூமியில் உள்ள மண்ணின் அடிப்புற பகுதியில் இருந்து எளிதில் நுழைந்துவிடுகிறது. காற்று, சூரிய வெப்பம், வெளிச்சம் எதுவும் அறைகளின் உட்புறம் செல்லாமல் இருப்பது, இதுபோன்ற பாதிப்புக்கு வழிவகுக்கிறது.
ஆண்டுதோறும் கட்டடத்தை பராமரிக்க வேண்டும். மரம் சம்பந்தப்பட்ட பொருட்களை, ஒரு குறிப்பிட்ட அறையில் வைத்து பூட்டி வைக்கக்கூடாது.
அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும். அங்கு காற்று புக வாய்ப்பு ஏற்படுத்தித்தர வேண்டும். ஈரப்பதம் ஆக இருக்கும் சூழலை, ஒரு போதும் ஏற்படுத்தக்கூடாது . ஈரப்பதம்தான் கரையானுக்கு ஏதுவானது. மழை காலத்தில் தண்ணீர் படும் ஜன்னல், நிலவு, கதவு ஆகியவற்றில் கரையான் உட்புகுந்து பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
கரையானுக்கு முதல் எதிரி சூரிய வெப்பம், வெளிச்சம், காற்று. எனவே , கரையான் எதிர்ப்பு மருந்துகளை அவ்வப்போது செலுத்தி, பாதிப்புகளை தவிர்க்கலாம் என்கின்றனர் பொறியாளர்கள்.

