தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/கனவு இல்லம்/சிறப்பு கட்டுரை/ காலிமனை வாங்கும் போது மக்கள் கவனிக்க வேண்டிய தகவல்கள்!

 காலிமனை வாங்கும் போது மக்கள் கவனிக்க வேண்டிய தகவல்கள்!

 காலிமனை வாங்கும் போது மக்கள் கவனிக்க வேண்டிய தகவல்கள்!


ADDED : செப் 19, 2026 07:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 19, 2026 07:11 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இன்றைய சூழலில் பெருநகரங்களில் வசிப்போரில் பெரும்பாலான மக்கள், எதிர்காலத்தில் வீடு கட்டலாம் என்ற எண்ணத்தில் காலி மனை வாங்குவதில் கவனம் செலுத்துகின்றனர். இவ்வாறு காலிமனை வாங்ககும் போது மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும்.

பெரும்பாலான சமயங்களில் நீங்கள் தற்போது வசிக்கும் பகுதியில் இருந்து, 60 முதல், 70 கி.மீ., தொலைவில் உள்ள கிராமங்களில் தான் காலி மனைகள் கிடைக்கின்றன. இதில் விற்பனைக்கு வரும் காலிமனையை வாங்குவதற்கு முன், ஒரு முறையாவது நேரில் சென்று பார்க்க வேண்டும்.

குறிப்பாக, அந்த காலிமனையை விற்பது யார் என்ற விபரத்தை தெளிவாக அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர் நிறுவனமா அல்லது தனிப்பட்ட உரிமையாளரா என்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர் உருவாக்கிய திட்டம் என்றால் உரிய அங்கீகாரம் பெறப்பட்டுள்ளதா, மனைப்பிரிவில் சாலை, பூங்கா போன்ற வசதிகளுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளதா என்பதையும் தெளிவாக விசாரிக்க வேண்டும். அங்கீகாரம் தொடர்பான ஆவணங்களின் பிரதிகளை கேட்டு வாங்கி பார்க்க வேண்டும்.

சில சமயம் ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர் காட்டும் வரைபடம் தொடர்பாக சந்தேகம் எழுந்தால், சம்பந்தப்பட்ட அரசு துறை அலுவலகத்துக்கு சென்று அதன் உண்மை தன்மையை சரி பார்ப்பது அவசியம். இவ்வாறு செய்வதால், போலி ஆவணங்களை நம்பி மனை வாங்குவதை தவிர்க்கலாம்.

நீங்கள் மனை வாங்க வேண்டும் என்று நினைக்கும் திட்டத்தில், சாலை, பூங்காவுக்கான இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா வரைபடத்தில் காட்டினால் மட்டும் போதாது, அந்த நிலம் உள்ளாட்சி அமைப்பிடம் முறையாக ஒப்படைக்கப்பட்டுள்ளதா என்ற பாருங்கள்.

அதே நேரம், சில இடங்களில் தனியார் சிலர் தங்களிடம் உள்ள நிலத்தின் ஒரு பகுதியை மனையாக விற்பனை செய்வர். இவ்வாறு, ஏற்கனவே உள்ள நிலத்தின் ஒரு பகுதியை பிரித்து கொடுக்கப்படும் நிலையில், அதில் பிரதான மனை அங்கீகரிக்கப்பட்டதா என்பதை பார்க்க வேண்டும்.

முறையாக அங்கீகரிக்கப்பட்ட வீட்டு மனையின் ஒரு பகுதி நிலத்தை அதன் உரிமையாளர் விற்கிறார் எனும் போது அதை வாங்குவதில் பிரச்னை இல்லை. வீட்டுமனையாக அங்கீகரிக்கப்படாத நிலத்தின் ஒரு பகுதியை வீடு கட்டும் நோக்கில் வாங்கினால், அதை பயன்படுத்தும் போது பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது.

அந்த பகுதிக்கான நில வழிகாட்டி மதிப்பு என்ன, சந்தை நிலவரப்படியான விலை என்ன என்பது போன்ற விபரங்களை விசாரிப்பது அவசியம் என்கின்றனர் நகரமைப்பு வல்லுனர்கள்.

தனியார் சிலர், தங்களிடம் உள்ள நிலத்தின் ஒரு பகுதியை, மனையாக விற்பனை செய்வர்கள், இவ்வாறு, பிரித்து கொடுக்கப்படும் நிலையில், அதில் பிரதான மனை அங்கீகரிக்கப்பட்டதா என்பதை பார்க்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us