sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 07, 2026 ,மாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

கனவு இல்லம்

/

சிறப்பு கட்டுரை

/

 கட்டுமானத்தின் இறுதியில் உரிமையாளரும் பொறியாளரும் கைகோர்ப்பது அவசியம்

/

 கட்டுமானத்தின் இறுதியில் உரிமையாளரும் பொறியாளரும் கைகோர்ப்பது அவசியம்

 கட்டுமானத்தின் இறுதியில் உரிமையாளரும் பொறியாளரும் கைகோர்ப்பது அவசியம்

 கட்டுமானத்தின் இறுதியில் உரிமையாளரும் பொறியாளரும் கைகோர்ப்பது அவசியம்


ADDED : ஜன 24, 2026 05:17 AM

Google News

ADDED : ஜன 24, 2026 05:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வீட்டின் அழகு, தினசரி வசதி மற்றும் எதிர்கால பராமரிப்பு செலவு அனைத்தும் கட்டுமானத்தின் இறுதிக்கட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையிலேயே அமைகின்றன. எனவே, அவசரப்படாமல் இல்ல உரிமையாளர்கள் தெளிவான முடிவு எடுக்க வேண்டும்.

குளியலறை மற்றும் பால்கனிக்கு 'ஆன்டி ஸ்கிட் டைல்ஸ்' பொருத்தமானவை. நல்ல நிறுவனத்தின் தரமான பொருட்கள் மற்றும் பொறியாளரின் ஆலோசனை இருந்தால் பொருட்கள் வாங்குவதில் அதிக செலவு இருக்காது.

மின்சார பணிகளில் பாதுகாப்பே முதன்மையானது. ஸ்விட்ச், ஒயர், லைட் போன்றவை ஐ.எஸ்., தரத்தில் இருப்பது அவசியம். குறைந்த விலை காரணமாக தரமற்ற பொருட்களை பயன்படுத்தினால், அடிக்கடி பழுது ஏற்படும்; பாதுகாப்பு அபாயங்களும் உருவாகும்.

ஆரம்பத்தில் கொஞ்சம் கூடுதல் செலவு செய்தாலும், தரமான பொருட்கள் நீண்ட கால செலவைக் குறைக்கும். குளியலறை மற்றும் பிளம்பிங் சாதனங்கள் தினசரி பயன்படுத்தப்படும் முக்கிய பொருட்கள் தேர்வு செய்யும்போது நீர் அழுத்தத்திற்கு பொருத்தமானதா, ஸ்பேர் பொருட்கள் எளிதில் கிடைக்குமா ஆகிய அம்சங்களை கவனிக்க வேண்டும்.

அதிக அலங்கார மாடல்களை விட, நீடித்து பயன்படுத்தக்கூடிய தரமான பொருட்களே சிறந்தது. வீட்டின் வெளிப்புற தோற்றத்தை தீர்மானிப்பது 'எலிவேஷன் டிரைன்'. அதிக அலங்காரங்கள் கொண்ட எலிவேஷன் ஆரம்பத்தில் அழகாக தோன்றினாலும், காலப்போக்கில் அதிக பராமரிப்பு தேவைப்படும். உள்ளூர் காலநிலையை தாங்கக்கூடிய பொருட்களையும், எளிமையான வடிவமைப்பையும் தேர்வு செய்தால், அந்த வீடு பல ஆண்டுகள் அழகுடன் இருக்கும். எளிமையே நீண்ட அழகு என்பதே முகப்பு பகுதிக்கு சரியான அணுகுமுறையாகும். கட்டுமான இறுதிக்கட்டத்தில் கட்டட உரிமையாளரும், பொறியாளரும் இணைந்து செயல்படுவது மிக முக்கியம்.

உரிமையாளர் தனது தேவைகள், ரசனை மற்றும் 'பட்ஜெட்' குறித்து தெளிவாக கூற வேண்டும். அதே நேரத்தில் பொறியாளர் தரம், பாதுகாப்பு மற்றும் நடைமுறை அம்சங்களை வழிகாட்டியாக வழங்க வேண்டும். இருவரும் சேர்ந்து முடிவு எடுத்தால் தரமான வீடு, செலவில் சிக்கனம் மற்றும் முழுமையான மனத்திருப்தி ஆகியன ஒரே நேரத்தில் கிடைக்கும். எதிர்காலத்தில் தேவையற்ற பொருளாதார இழப்பை தடுக்க முடியும்.

சரவணகுமார்: செயற்குழு உறுப்பினர் 'காட்சியா':






      Dinamalar
      Follow us