/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
சிறப்பு கட்டுரை
/
கான்கிரீட் துாணில் விரிசல் ஏற்படுவது ஏன் என்பதை கவனிப்பது அவசியம்!
/
கான்கிரீட் துாணில் விரிசல் ஏற்படுவது ஏன் என்பதை கவனிப்பது அவசியம்!
கான்கிரீட் துாணில் விரிசல் ஏற்படுவது ஏன் என்பதை கவனிப்பது அவசியம்!
கான்கிரீட் துாணில் விரிசல் ஏற்படுவது ஏன் என்பதை கவனிப்பது அவசியம்!
ADDED : ஆக 01, 2025 07:58 PM

பு திதாக வீடு கட் டும் போது அதன் ஒவ்வொரு பாகமும் உறுதியாக இருக்க வேண்டும் என்பதற்காக மக்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கின்றனர். இதில் கட்டுமான பணியின் போது எவ்வளவு விழிப்புடன் இருந்தாலும், சில ஆண்டுகளில் அதில் ஏற்படும் விரி சல்கள் உரிமையாளர்களுக்கு கவலை மட்டுமல்லாது மன உளைச்சலையும் ஏற்படுத்துகின்றன.
இந்நிலையில் சிமென்ட், மணல், ஜல்லி, தண்ணீர் சேர்த்து தயாரிக்கப்படும் கான் கிரீட் கலவையில் அனைத்தும் சரியான விகிதத்தில் சேர்க்கப் பட வேண்டும். இதில் ஏதாவது ஒரு பொருளின் விகிதம் மாறினாலும், கான் கிரீட்டின் ஒட்டுமொத்த தரமும் பாதிக்கப்படும் என்பதை உரிமையாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இதனால், துாண்கள், பீம்கள், தளம் ஆகிய பாகங்களுக்கான கான்கிரீட் தயாரிக்கும் வேலையை பணியாளர்களிடம் ஒப்படைக்க பலரும் தயங்குகின்றனர். தற்போது பெரும்பாலான மக்கள் ரெடிமிக்ஸ் நிறுவனங்களிடம் இருந்து கான்கிரீட் வாங்கினால் தயாரிப்பு நிலையில் குறைபாடுகள் ஏற்படுவதை தடுக்கலாம் என்று நினைக்கின்றனர்.
ரெடிமிக்ஸ் ஆலைகளில் நீங்கள் கேட்கும் விகிதங்களில் கான்கிரீட் தயாரித்து வழங்கப்படும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்காது. அதே நேரத்தில் ரெடிமிக்ஸ் ஆலையில் இருந்து அனுப்பப்படும் கான்கிரீட் கலவையை பயன்படுத்தும் இடத்தில் எவ்வித குறை பாடும் இன்றி பார்த்துக் கொள்ள வேண் டும்.
பொதுவாக, கட்டடங்களின் சுவர்களில் ஏற்படும் விரிசல்களை காட்டிலும், துாண்களில் ஏற்படும் விரிசல்கள் பெரிய அளவில் ஆபத்துக்கு வழிவகுப்பதாக அமைந்துள்ளன. இதில் விரிசல் ஏற்பட்ட நிலையில், அதற்கான காரணங்களை ஆராயும் போது விழிப்புடன் செயல்பட்டால் மட்டுமே உண்மை நிலவரம் வெளிப் படையாக தெரியவரும்.
பெரும்பாலான கட்டடங்களின் துாண்களில் வெடிப்பு, விரிசல் ஏற்பட, அதன் மேல் பாகமான தளத்தில் இருந்து ஏற்படும் நீர்க்கசிவே காரணமாக இருக்கும் என்று பரவலாக கூறப்படுகிறது. இப்படி மேலிருந்து இறங்கும் நீர், துாணில் உள்ள கம்பிகளில் சேர்ந்து அதை விரிவடைய செய்யும்போது, கம்பியை சுற்றியுள்ள கான்கிரீட்டில் உடைப்பு ஏற்படுகிறது.
இதுமட்டுமல்லாது, சில இடங்களில், தரையின் கீழ் பகுதியில் ஏற்படும் ஈரம் காரணமாகவும் கட்டடத்தில் விரிசல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, தரைதள கட்டடங்களில் நிலத்தில் முறையாக தடுப்பு நடவடிக்கை எடுக்கப்படாத இடங்களில் மழைக்காலத்தில் ஏற்படும் அதிகபட்ச ஈரம், கட்டடத்தில் மெல்ல மேல்நோக்கி பரவும்.
இவ்வாறு துாண்களில் பரவும் ஈரம், கம்பிகளை அடைந்து, அதில் துரு ஏற்பட காரணமாகிறது. இப்படி, கம்பிகளில் துரு ஏற்படும் நிலையில், அது கான்கிரீட்டில் வெடிப்பு அல்லது விரிசல்களை ஏற்படுத்தும் என்பதை புரிந்து, அதற்கு ஏற்ற தடுப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்கின்றனர் கட்டுமான துறை வல்லுநர்கள்.