sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

கனவு இல்லம்

/

சிறப்பு கட்டுரை

/

களிமண் பகுதியில் அமையும்  கட்டடங்களின் தரம்! 'கான்கிரீட்' வெளிப்புற பகுதிகளில் தேவை கவனம்

/

களிமண் பகுதியில் அமையும்  கட்டடங்களின் தரம்! 'கான்கிரீட்' வெளிப்புற பகுதிகளில் தேவை கவனம்

களிமண் பகுதியில் அமையும்  கட்டடங்களின் தரம்! 'கான்கிரீட்' வெளிப்புற பகுதிகளில் தேவை கவனம்

களிமண் பகுதியில் அமையும்  கட்டடங்களின் தரம்! 'கான்கிரீட்' வெளிப்புற பகுதிகளில் தேவை கவனம்


ADDED : நவ 15, 2024 09:50 PM

Google News

ADDED : நவ 15, 2024 09:50 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இயற்கையான முறையில் கட்டப்படும் கட்டடங்களின் ஆயுட்காலம் எவ்வளவு காலம் நிலைத்து இருக்கும்?


-பழனியப்பன், ராமநாதபுரம்.

இயற்கை முறையில் கட்டப்படும் கட்டுமானங்கள் அந்தந்த பகுதிகளில் கிடைக்கும் கட்டுமான பொருட்களை கொண்டு பொதுவாக கட்டப்படும். இந்த வகையான கட்டுமானங்கள், உயிரோட்டம், அமைப்புகளுடன் நல்ல ஆரோக்கியமான உள் அமைவிடம் உருவாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு கட்டப்படும். இயற்கை முறையில் கட்டப்படும் கட்டடங்கள் நீரினால் பாதிப்பு ஏற்படாமல் சரியான முறையில் பராமரிக்கும் போது பல நுாறு ஆண்டுகள் நிலைத்து நிற்கும்.

கட்டுமான சந்தையில் கிடைக்கும் சிமென்ட் பலமாடி கட்டடங்களின் உறுதிக்கு உகந்ததாக இருக்குமா?


-வாணி, சுங்கம்.

கட்டுமான சந்தையில், 15 வகையான சிமென்ட்கள் கிடைக்கின்றன. அவை ஒவ்வொன்றும் தனித்தனி குணங்களோடு குறிப்பிட்ட வகை பயன்பாட்டிற்கு உகந்ததாக உள்ளன.

அவற்றின் பயன்பாடுகளை புரிந்து கொண்டு சிமென்ட் தேர்வு செய்து பயன்படுத்தும்போது, அது உறுதியானதாகவும், வலிமையானதாகவும் இருக்கும். பொதுவாக சந்தையில், 53 கிரேடு சிமென்ட் கிடைக்கிறது. 53 கிரேடு என்பது அதன் அழுத்த வலிமையை குறிக்கிறது.

நாங்கள் கட்டப்படும் கட்டடத்தின் பூமி சாய்வான நில அமைப்புடன் உள்ளது. கட்டடத்தின் அடித்தளம் அமைக்க 'மார்க்கிங்' செய்ய எந்த முறையில் செய்தால் சரியாக இருக்கும்?


-மேகநாதன்,

செல்வபுரம்.

பொதுவாக சாய்வான பூமியில் கட்டப்படும் கட்டடங்களுக்கு மூலை மட்டம், நுால் மற்றும் ஆட்களை கொண்டு 'மார்க்கிங்' செய்வது மிகத்துல்லியமாக இருக்காது. இதுபோல சாய்வான பூமிகளில் 'டோட்டல் ஸ்டேஷன்' என்ற தொழில்நுட்ப கருவியுடன் மார்க்கிங் செய்வதால் மிகத்துல்லியமாகவும், மிகவும் எளிதாகவும் இருக்கும்.

தற்சார்பு கட்டுமானங்கள் கட்ட உள்ளோம். அதைப்பற்றி சற்று விரிவாக விளக்கவும்.


-நந்தினி, வடவள்ளி.

தற்சார்பு கட்டுமானங்கள் என்பது கட்டடம் கட்டப்படும் பகுதிகளின் இயற்கை சூழல்களை ஆராய்ந்து கட்டப்படும் கட்டுமானங்கள்.

தற்சார்பு கட்டுமானம் பல நன்மைகளை கொண்டது. அவற்றுள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நிலையான கட்டுமானம், மேம்படுத்தப்பட்ட காற்றின் தரம், குடியிருப்பாளர்களின் ஆரோக்கியம் மற்றும் உற்பத்தி திறனை மேம்படுத்துதல், இயற்கை வளங்களை மறுசுழற்சி முறையில் பயன்படுத் துதல், உற்பத்தியாகும் கழிவுகளின் அளவை குறைத்தல், குறைந்த ஆற்றலை வெளியிடும் கட்டுமான பொருட்களை பயன்படுத்துதல் வாயிலாக கட்டுமான தொழிலில் 'கார்பன்' வெளியீட்டை குறைத்து, இயற்கை பேரழிவுகளுக்கு மேலும் தாங்கக்கூடியதாக மற்றும் எதிர்க்கும் திறனுடன் நிலையான கட்டுமானங்களை அமைக்கலாம்.

நாங்கள் கட்டி வரும் கட்டடத்தில் கழிவறை தொட்டிகளை கருங்கல் கொண்டு அமைக்கும் 'சோக் பிட்' முறையில் கட்டலாம் என்று கூறுகிறார்கள். தகுந்த ஆலோசனை கூறவும்?


-ராம்குமார், ஒண்டிப்புதுார்.

மனித கழிவுகளை சரியான முறையில் பக்குவப்படுத்தி வெளியேற்றுவது தனி மனிதனின் கடமையாகும். மனித கழிவுகளின் கழிவுநீரை சரியான முறையில் பக்குவப்படுத்தாமல், நிலத்தடி பகுதிகளிலும், கழிவுநீர் ஓடைகளிலும் வெளியிடுவது சமூக குற்றமாகும். நவீன தொழில்நுட்ப வளர்ச்சியால் மக்கும் மற்றும் சிதைக்கக்கூடிய, பாதுகாப்பான தொட்டிகள் சந்தைகளில் உள்ளன. இவற்றை பயன்படுத்துவதன் வாயிலாக மிகக்குறுகிய இடத்தில் அமைத்து, நமது நிலத்தடி நீர் மாசுபடாமலும், பொருளாதார பலன்களையும் பெற முடியும்.

நாங்கள் கட்டடம் கட்டுவது களிமண் பகுதியாக இருப்பதுடன் நான்கு அடி ஆழத்தில் நிலத்தடி நீர் கசிந்தும் வருகிறது. எங்களது கட்டடத்தின் அடித்தளத்தை எவ்வாறு அமைத்துக்கொள்வது என்ற ஆலோசனை கூறவும்?


-செல்வம், ஆலாந்துறை.

நீங்கள் அமைக்கும் கட்டடத்தின் பூமியின் தாங்கும் திறன் மற்றும் நிலத்தடி நீரின் தன்மை ஆகியவற்றை ஆராய்ந்து, சரியான பொறியாளர்களை கொண்டு கட்டடத்தின் கட்டுமான வடிவமைப்பை செய்து கொண்டு கட்டுவது மிகச் சிறந்தது. மேலும், நிலத்தடி நீர் அதிகமாக கசியும் பகுதிகளில் அடித்தளத்தின் 'கான்கிரீட்' வெளிப்புற பகுதிகளில் சரியான முறையில் சிறு துளைகளை அடைத்து, அதன் மீது 'வாட்டர் புரூபிங்' அல்லது 'தார் கோட்டிங்' கொண்டு முழுவதுமாக நீர் புகாமல் செய்து கொண்டால் கட்டடத்தின் அடிப்பகுதி மிகவும் வலிமையானதாகவும், பிற்காலங்களில் பாதிப்புக்கள் வராமலும் தடுத்துக்கொள்ளலாம்.

-விஜயகுமார்,

தலைவர்,

கோயம்புத்துார் மாவட்ட அனைத்து கட்டுமான பொறியாளர் சங்கம் (காட்சியா).






      Dinamalar
      Follow us