/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
சிறப்பு கட்டுரை
/
கட்டடம் கட்டுவது அப்புறம் முதலில் பாதுகாப்பு முக்கியம்
/
கட்டடம் கட்டுவது அப்புறம் முதலில் பாதுகாப்பு முக்கியம்
கட்டடம் கட்டுவது அப்புறம் முதலில் பாதுகாப்பு முக்கியம்
கட்டடம் கட்டுவது அப்புறம் முதலில் பாதுகாப்பு முக்கியம்
ADDED : ஜன 11, 2025 09:00 AM

கட்டுமானத்துறை என்பது விபத்துகள் அதிகம் நடப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ள ஒரு துறை. ஒரு கட்டடம் கட்டி முடிக்கப்படும் வரை, அந்தக் கட்டடம் பொறியாளர்களுக்கும், பணியாளர்களுக்கும், ஒரு தற்காலிகமான பணியிடமாக கருதப்படுகிறது.
கட்டடப் பணியின் தன்மைக்கு ஏற்பவும், பணியாளர்களை பொறுத்தும், இட நெருக்கடியை பொறுத்தும், ஆபத்துகளுக்கான வாய்ப்புகளும் வேகமாக மாறிக்கொண்டே வருகின்றன.
உதாரணத்திற்கு, நிலத்தடி தளத்திற்கும், தரை தளத்திற்கும் அல்லது ஐந்தாவது தளத்திற்கும் நடக்கக்கூடிய பணிகளில், ஏற்படக்கூடிய விபத்துகளின் அளவுகள் வேறு வேறு.
கட்டுமான பகுதி, திறந்த வெளியாக இருப்பதாலும், நடக்கக்கூடிய பாதைகள் கரடு, முரடாக சீரற்றவையாக இருப்பதாலும், இன்னும் சில தற்காலிக அமைப்புகளினாலும், கட்டுமான பணி அதிக ஆபத்து நிறைந்த சூழ்நிலைகளைக் கொண்டதாக இருக்கிறது.
இது குறித்து, 'காட்சியா' செயற்குழு உறுப்பினர் ஜெயபிரகாஷ் கூறியதாவது:
தற்காலிக சாரம் நழுவி விழுவதாலும், கூரை சரிந்து விடுவதாலும் அடுக்கி வைக்கப்பட்ட கட்டட பொருட்களாலும் விபத்துகள் ஏற்பட்டு, மனித ஆற்றலும், பணமும் வீணாக வாய்ப்புள்ளது. இது கட்டுமான பணியின் முன்னேற்றத்தை பாதிக்கிறது.
கூரை கட்டுமானம் பழுது பார்த்தல் மற்றும் அதிக உயரத்திலும் செங்குத்தாக அமைக்கப்பட்டிருக்கும் பரப்புகள் மீதும், அமர்ந்து பணி செய்யும் வேலையாட்கள், தகுந்த பாதுகாப்பு முறைகளை அமைத்து பணி செய்தால், கால்கள் இடறி விழுவதிலிருந்து தவிர்க்கலாம்.
ஒழுங்கற்ற, சமமில்லாத பரப்புகளின் மீது நடக்கும்போது, நிதானம் தவறுவதில் இருந்து பாதுகாக்க, தாங்கக்கூடிய வலைகள் கட்டடத்தை சுற்றி அமைத்து பாதுகாக்கலாம். தலைக்கு தடிமனான தொப்பி, கால்களுக்கு ஷூ, கைகளுக்கு உறை அணிந்திருக்க வேண்டும்.
மின்சார தாக்குதல் காரணமாக விபத்துகள் ஏற்படுவதை தடுக்க இ.எல்.சி.பி., சாதனம் கட்டாயம் அமைக்க வேண்டும். வைப்ரேட்டர் கட்டிங் மெஷின், பாலிசிங் மெஷின் போன்ற மின்சாதன பொருட்களை, மிகவும் பாதுகாப்பான முறையில் இணைப்பு கொடுத்து உபயோகிக்க வேண்டும்.
கட்டுமானம் தொடர்பான இயந்திரங்களை, தொழிலாளர்கள் பாதுகாப்பு செயல் முறைகளை கற்றறிந்து கையாள வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதால், உயிரிழப்பு மற்றும் ஆபத்தை ஏற்படுத்தும் விபத்துக்களை குறைக்கலாம். தேசிய கட்டுமான கோட்பாடு(NBC 2005) வகுத்துள்ள, பாதுகாப்பு வழிமுறைகளின்படி பணிபுரிய வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.