தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/கனவு இல்லம்/சிறப்பு கட்டுரை/ சரிவான நிலத்தில் வீடு கட்டும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

 சரிவான நிலத்தில் வீடு கட்டும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

 சரிவான நிலத்தில் வீடு கட்டும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!


ADDED : செப் 26, 2026 07:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 26, 2026 07:11 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எதிர்காலத்தில் வீடு கட்டி குடியேறலாம் என்ற எண்ணத்தில் பலரும் தற்போது காலி மனைகளை வாங்குகின்றனர். இத்தகைய மனைகளை வாங்கும் போது அது முறையா அங்கீகரிக்கப்பட்டதா, அங்கு எதிர்காலத்தில் வீடு கட்ட அனுமதி கிடைக்குமா என்பதை விசாரிக்க வேண்டும்.

பொதுவாக, காலி மனை வாங்கும் போது அது எந்த பகுதியில் எப்படி அமைந்துள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். குறிப்பாக, நீங்கள் வாங்கும் மனையின் அனைத்து பகுதிகளும் சமதளமாக இருக்க வேண்டும் என்பதில் எவ்வித சமரசமும் செய்ய கூடாது.

ஆனால், சில சமயங்களில் மலைப்பாங்கான பகுதிகளில் காலி மனை வாங்க வேண்டிய சூழல் உருவாகக்கூடும். இதில் மனை வாங்கும் போதே அதில் சரிவு எப்படி, என்ன கோணத்தில் அமைந்துள்ளது என்பதை தொழில்நுட்ப ரீதியாக அறிந்து கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் குறிப்பாக, ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைவாசஸ்தலங்கள் அருகில் நிலம் வாங்க மக்களிடம் ஆர்வம் காணப்படுகிறது. இவ்வாறு நிலம் வாங்கும் போது அது எத்தனை டிகிரி சரிவு கோணத்தில் அமைந்துள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

இத்தகைய சூழலில், நிலம் அமைந்துள்ள பகுதியின் சரிவு கோணம், 40 டிகிரி வரை இருக்கலாம், என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் கூறுகின்றனர். அப்படி இருந்தாலும், கட்டடம் கட்டும் போது அதற்கான அஸ்திவாரம் அமைப்பதில், கட்டடத்தை வடிவமைப்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

இதில் நிலத்தின் தரைமட்ட உயரம் என்ன என்தை மிக துல்லியமாக அறிந்து அகற்கு ஏற்ப அஸ்திவார ஆழத்தை முடிவு செய்ய வேண்டும். குறிப்பாக, கடல் மட்டத்தில் இருந்து அந்த நிலத்தின் உயரம் என்ன என்பதை பார்த்து அதன் அடிப்படையில் அஸ்திவாரம் அமையும் ஆழத்தை இறுதி செய்ய வேண்டும்.

சரிவான மலைப்பகுதிகளில் நிலம் வாங்கும் போது அங்கு அக்கம்பக்கத்து சூழல் என்ன என்பதை கவனமாக ஆராய வேண்டும். வனப்பகுதியை ஒட்டி நிலம் வாங்கினால், எதிர்காலத்தில் வன விலங்குகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கும்.

இது மட்டுமல்லாது, வனப்பகுதி விரிவாக்கம் போன்ற பிரச்னைகளும் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. குறிப்பாக, பெரிய பள்ளத்தாக்குகள் உள்ள பகுதிகளை ஒட்டிய மலைப்பகுதிகளில் நிலம் வாங்குவதை ஆரம்ப நிலையிலேயே தவிர்க்க வேண்டும்.

நிலம் சரியானதாக இருந்தாலும், நீங்கள் கட்டும் கட்டடத்தின் உட்புற பகுதி துல்லியமான சமநிலையில் இருக்க வேண்டும். இதற்கு ஏற்ப அஸ்திவார துாண்கள் அமைப்பதில், ஏற்ற இறக்கங்களை கவனித்து செயல்பட வேண்டும் என்கின்றனர் கட்டுமான துறை பொறியாளர்கள்.

சரிவான மலைப்பகுதிகளில் நிலம் வாங்கும் போது அங்கு அக்கம்பக்கத்து சூழல் என்ன என்பதை கவனமாக ஆராய வேண்டும், பாதுகாப்பு இருக்கும் என்பதை உறுதி செய்வது அவசியம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us