/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
சிறப்பு கட்டுரை
/
வீடு வாங்கும் போது கழிவுநீர் வடிகால் விஷயத்தில் கவனிக்க வேண்டியவை!
/
வீடு வாங்கும் போது கழிவுநீர் வடிகால் விஷயத்தில் கவனிக்க வேண்டியவை!
வீடு வாங்கும் போது கழிவுநீர் வடிகால் விஷயத்தில் கவனிக்க வேண்டியவை!
வீடு வாங்கும் போது கழிவுநீர் வடிகால் விஷயத்தில் கவனிக்க வேண்டியவை!
ADDED : ஆக 01, 2025 07:59 PM

பு திதாக வீடு வாங்கும் போது அதில் நீங்கள் நிம்மதியாக வசிப்பதற்கு தேவயான அடிப்படை வசதிகள் முறையாக செய்யப்பட்டுள்ளதா என்பதை கவனமாக பார்க்க வேண்டும். பொதுவாக, ஒரு வீடு என்றால் அதில் மின்சார இணைப்பு, தண்ணீர், கழிவுநீர் வடிகால் போன்ற வசதிகள் சரியான முறையில் செய்யப்பட்டு இருக்க வேண்டும்.
தமிழகத்தில் நகர், ஊரமைப்பு சட்டப்படி தயாரிக்கப்பட்ட பொது கட்டட விதிகளின் அடிப்படையில் தான் அடுக்குமாடி திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப் படுகிறது. இவ்வாறு ஒப்புதல் அளிக்கும் நிலையில் அடிப்படை வசதிகள் தொடர்பாக பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்படுவது வழக்கமானதாக உள்ளது.
எப்படியாவது கட்டுமான திட்ட அனுமதி கிடைத்தால் போதும் என்ற எண்ணத்தில் இருக்கும் கட்டுமான நிறுவனங்கள் இந்த நிபந்தனைகளுக்கு ஒப்புதல் தெரிவிக்கின்றன. ஆனால், இந்த நிபந்தனைகளை செயல்படுத்தும் போது பெரும்பாலான கட்டுமான நிறுவனங்கள் சரியாக நடந்தாலும், சில நிறுவனங்கள் இதை மதிப்பது இல்லை.
குறிப்பாக, 50 வீடுகளுக்கு மேல் ஒரு இடத்தில் கட்டப்படும் நிலையில் அங்கு கழிவு வடிகால் வசதிகள் எப்படி இருக்க வேண்டும் என்பது தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது. வீடுகளில் இருந்து எவ்வளவு கழிவுநீர் வெளியேறும் என்ற அடிப்படையில் அதை மேலாண்மை செய்வதற்கான வசதிகளை செய்ய வேண்டும்.
நீங்கள் வீடு வாங்கும் குடியிருப்பு அமைந்துள்ள பகுதியில் பாதாள சாக்கடை வசதி அமைந்து இருந் தாலும், இல்லாவிட்டாலும், அங்கு கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைய வேண்டும். மாசு கட்டுப்பாடு வாரியம் வரையறுத்துள்ள வழிமுறைகளுக்கு உட் பட்டு தான் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட வேண்டும்.
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளதா என்று மேலோட்டமாக மட்டும் பார்த் தால் போதாது, அது தொடர்ந்து செயல்பட என்ன ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது என்பதையும் பார்க்க வேண்டும். வீடுகளில் இருந்து கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு செல்வதற்கான வழி எப்படி அமைக்கப்பட்டுள்ளது என்று பாருங்கள்.
குறிப்பாக, ஒவ்வொரு வீட்டிலும், கழிப்பறை நீர் தனியாகவும், குளியல், சமையல் பணிகளுக்கு பின் வெளியேறும் நீர் தனியாகவும் பிரித்து மேலாண்மை செய்யப்பட வேண்டும். சுத்திகரிப்பு நிலையிலும் இவற்றை தனித்தனியாக தான் மேலாண்மை செய்ய வேண்டும் என்பதால், இதை புரிந்து கையாள்வதற்கான வசதி செய்யப்பட்டுள்ளதா என்று பாருங்கள்.
இது மட்டுமல்லாது, சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை மறுமுறை பயன்படுத்துவதறகான வசதி எப்படி செய்யப்பட்டுள்ளது என்பதை யும் கவனிக்க வேண்டும். பெரும்பாலான குடியிருப்புகளில் இது போன்ற வசதிகள் செய்யப் பட்டாலும் அது தொடர்ந்து செயல்பட ஏற்பாடு இருக்காது என்பதால், வீடு வாங்கும் நிலையில் இதை மக்கள் கவனமாக பார்க்க வேண்டும் என்கின்றனர் நகரமைப்பு வல்லுனர்கள்.