sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 09, 2026 ,மாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

கனவு இல்லம்

/

சிறப்பு கட்டுரை

/

 அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்களில் மின் செலவை குறைக்கும் வழிமுறைகள்!

/

 அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்களில் மின் செலவை குறைக்கும் வழிமுறைகள்!

 அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்களில் மின் செலவை குறைக்கும் வழிமுறைகள்!

 அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்களில் மின் செலவை குறைக்கும் வழிமுறைகள்!


ADDED : மார் 07, 2026 08:03 AM

Google News

ADDED : மார் 07, 2026 08:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழகத்தில் மரபுசாரா எரிசக்தி உற்பத்திக்கு அரசு கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. இது சார்ந்த திட்டங்களை செயல்படுத்த மானியம் வழங்குவது உட்பட பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருவதுடன் விதிமுறைகளிலும் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்த வகையில் அடுக்குமாடி கட்டடங்கள் கட்டும் போது அதில் மேல் தளத்தில் சோலார் மின்சார உற்பத்திக்கான கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும். இந்த வசதி இருந்தால் மட்டுமே சம்பந்தப்பட்ட கட்டடங்களுக்கு பணிநிறைவு சான்றிதழ் வழங்கப்படும்.

இதனால், பெரும்பாலான கட்டுமான நிறுவனங்கள் அடுக்குமாடி திட்டங்களை செயல்படுத்தும் போது அதில் சோலார் மின்சார உற்பத்திக்கான வசதிகளை செய்ய முன்வந்துள்ளன. ஆனால், இதில் சோலார் வசதி செய்யப்பட்டாலும், அதில் கிடைக்கும் மின்சாரத்தை எப்படி பயன்படுத்துவது என்பதில் குழப்பம் ஏற்படுகிறது.

தற்போதைய நிலவரப்படி, அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்களில், சூரிய சக்தி மின்சார உற்பத்திக்காக சோலார் பேனல்கள் அமைக்கப்படுகின்றன. பெரும்பாலான நிறுவனங்கள் முறையான திட்டமிடுதல் இன்றி பெயரளவுக்கு சோலார் பேனல்களை வைத்துவிடுகின்றன.

அந்த குடியிருப்பு பராமரிப்பு பொறுப்பை ஏற்கும் வீட்டு உரிமையாளர் சங்கங்கள், இந்த பேனல்களை பயன்படுத்தி மின்சார உற்பத்தி செய்ய முயற்சி செய்கின்றனர். ஆனால், சோலார் மின்சாரத்தை எதற்கு எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதில் குழப்பம் நிலவுகிறது.

குடியிருப்பு வளாகங்களில் பொது இடங்களில் உள்ள விளக்குகளுக்கு சோலார் மின்சாரத்தை பயன்படுத்தவே பலரும் நினைக்கின்றனர். ஆனால், தற்போது பெரும்பாலான இடங்களில் எல்.இ.டி., விளக்குகள் அமைக்கப்படுவதால், தண்ணீர் எடுப்பதற்கான மோட்டார்களை இயக்க சோலார் மின்சாரத்தை பயன்படுத்துவது நல்லது.

உங்கள் குடியிருப்பு வளாகத்தில் உள்ள மோட்டார்களின் எண்ணிக்கை, அதற்கு தேவைப்படும் மின் சக்தி ஆகியவற்றை கணக்கிட்டு அதற்கு ஏற்றபடி சோலார் பேனல்களை பயன்படுத்தலாம். மோட்டார்களுக்கான மின்சாரம் யூனிட்டுக்கு, 8 ரூபாய் வரை கட்டணம் விதிக்கப்பட்ட நிலையில் சோலார் மின்சாரம் இதற்கு நல்ல தீர்வாக அமையும்.

அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்களில், போர்வெல் அமைப்புகளில் இருந்து தண்ணீர் எடுப்பது, கீழ் நிலை தொட்டியில் சேகரிப்பது, மேல்நிலை தொட்டிகளுக்கு அனுப்புவது ஆகிய இடங்களில் மின்சார தேவை அதிகமாக உள்ளது. இந்த இடங்களில் சோலார் மின்சாரத்தை பயன்படுத்துவதால் செலவை வெகுவாக குறைக்கலாம்.

எனவே, விளக்குகளுக்கு பயன்படுத்த சோலார் வசதியை அமைக்காமல், மோட்டார்களில் பயன்படுத்த திட்டமிட்டால் முழுமையான பயன் கிடைக்கும். இதற்கு ஏற்றபடி திட்டமிட்டு செயல்பட வேண்டும் என்கின்றனர் கட்டுமான துறை வல்லுநர்கள்.

குடியிருப்பு வளாகத்தில் உள்ள மோட்டார்களின் எண்ணிக்கை, அதற்கு தேவைப்படும் மின் சக்தி ஆகியவ ற்றை கணக்கிட்டு அதற்கு ஏற்றபடி சோலார் மின்சார உற்பத்தியை பயன்படுத்தலாம்.






      Dinamalar
      Follow us