/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
சிறப்பு கட்டுரை
/
'கிரெடிட் ஸ்கோர்' அடிப்படையில் கடன் யார், யாருக்கெல்லாம் மறுக்கப்படுகிறது?
/
'கிரெடிட் ஸ்கோர்' அடிப்படையில் கடன் யார், யாருக்கெல்லாம் மறுக்கப்படுகிறது?
'கிரெடிட் ஸ்கோர்' அடிப்படையில் கடன் யார், யாருக்கெல்லாம் மறுக்கப்படுகிறது?
'கிரெடிட் ஸ்கோர்' அடிப்படையில் கடன் யார், யாருக்கெல்லாம் மறுக்கப்படுகிறது?
ADDED : ஜன 18, 2025 07:35 AM

சொ ந்த வீடு கட்டுமான செலவை சந்திக்க, பெரும்பாலானோர் வங்கிக் கடன்களையே நம்புகிறார்கள். வீட்டு கட்டட கடன் பெற, அடிப்படை வழிமுறைகளை அறிந்துகொள்வது பணிகளை எளிமையாக்கும்.
'காட்சியா' உறுப்பினர் சரவணகுமார் கூறியதாவது:
வங்கி கடனானது, 21 முதல், 65 வயது வரை உள்ளவர்களுக்கு கிடைக்கும். 'கிரெடிட் ஸ்கோர்' 750க்கு மேல் இருந்தால், கடனுக்கான நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும்.
வங்கிக்குச் சென்று நேரடியாக அல்லது வங்கியின் இணையதளத்தில் கடன் பெற விண்ணப்பிக்கலாம். ஆதார் அட்டை, பான் அட்டை, பட்டா, சிட்டா, விற்பனைச் சான்று, டீ.டி.சி.பி., அங்கீகரிக்கப்பட்ட கட்டட வரைபடம் தேவை.
சொத்து ஆவணங்களை, சட்ட ஆலோசகர் பரிசோதிக்க வேண்டும். சொத்து உரிமை சரிவை உறுதிப்படுத்த, பட்டா, கையகச்சான்று உட்பட அனைத்தும் சரிபார்க்கப்படும். வங்கியானது, சொத்து குறித்த சட்ட ஆலோசனை அறிக்கையின் அடிப்படையில் மட்டுமே கடன் வழங்கும். வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட மதிப்பீட்டாளர், சொத்து மதிப்பீட்டினை கணக்கிட்டு, வங்கிக்கு மதிப்பீட்டு அறிக்கையை வழங்குகிறார்.
பதிவு செய்யப்பட்ட பொறியாளரின் பங்கு முக்கியமானது. அவர், டீ.டி.சி.பி., அல்லது நகராட்சி விதிமுறைகளுக்கு ஏற்ப, அனுமதி வரைபடங்களை தயாரிக்கிறார்.
இது, வங்கிக் கடனுக்கான அடிப்படை ஆவணம். திட்டம், பணிகள், மற்றும் உபகரணங்களின் விவரங்களுடன், பொறியாளர் விரிவான செலவு கணக்கீட்டை உருவாக்குகிறார்.
சுருக்கமான செலவுக் கணக்கு, வங்கியில் கடனின் அளவீட்டிற்கு பயன்படுத்தப்படும். கட்டுமானம் ஒவ்வொரு நிலைக்கு முன்னேறும்போது, பணம் விடுவிக்க, வங்கி பண நிலை அறிக்கை பெற வேண்டும். இந்தச் சான்றிதழை, பதிவு செய்யப்பட்ட பொறியாளர் வழங்குவார்.
நில அடித்தளம், தரைத்தளம், மேல் தளம் மற்றும் இறுதிப்பணிகள் என கணக்கிடப்படும். ஒவ்வொரு வங்கியிலும், 8.40, 8.50, 8.75 சதவீதம் என மார்க்கெட் நிலைமையை பொறுத்து, வட்டி விகிதங்கள் மாறக்கூடும். சாதாரண பணியாளர்கள், குறைந்த வருமானம், தினசரி, கூலித் தொழிலாளர்கள் மற்றும் குறைந்த வருமானத்திற்கேற்ப, சிறு கடன்கள் கிடைக்கும்.
'கிரெடிட் ஸ்கோர்' நன்றாக வைத்துக்கொள்ள, சரியான நேரத்தில் கடனை திருப்பி செலுத்த வேண்டும். நிலையான மற்றும் மிதமான வட்டி விகிதங்களை புரிந்து தேர்வு செய்யவும். திட்டமிடல், உரிய ஆவணங்கள், மற்றும் வங்கியின் நிபந்தனைகளை பின்பற்றுவதன் மூலம், கனவுகளை நனவாக்கலாம்.
இவ்வாறு, அவர் கூறினார்.