/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
சிறப்பு கட்டுரை
/
நில உரிமையாளர்களுக்குள் ஏற்படும் பிரச்னையால் மனை வாங்கியவருக்கு பாதிப்பு வருமா?
/
நில உரிமையாளர்களுக்குள் ஏற்படும் பிரச்னையால் மனை வாங்கியவருக்கு பாதிப்பு வருமா?
நில உரிமையாளர்களுக்குள் ஏற்படும் பிரச்னையால் மனை வாங்கியவருக்கு பாதிப்பு வருமா?
நில உரிமையாளர்களுக்குள் ஏற்படும் பிரச்னையால் மனை வாங்கியவருக்கு பாதிப்பு வருமா?
ADDED : நவ 01, 2025 07:01 AM

பொ துவாக, வீடு, மனை போன்ற சொத்துக்கள் வாங்கும் போது, தனி நபர்களிடம் இருந்து வாங்குவது நல்லது என்ற கருத்து உள்ளது. ஆனால், எதார்த்த நிலையில், கட்டுமான அல்லது ரியல் எஸ்டேட் மேம்பாட்டு நிறுவனத்திடம் இருந்து தான் பெரும்பாலான மக்கள் சொத்து வாங்கும் நிலை உள்ளது.
இவ்வாறு, கட்டுமான நிறுவனம், ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளரிடம் இருந்து சொத்து வாங்கும் நிலையில், அந்நிறுவனம் அதன் முழுமையான உரிமையாளரா என்பதையும் மக்கள் சரி பார்க்க வேண்டியது அவசியம். இதில் நிலத்தை அதன் உரிமையாளரிடம் இருந்து கிரையம் பெற்று, அதை மேம்படுத்தி விற்பது தான் சரியான நடைமுறையாக இருக்கும்.
ஆனால், பெரும்பாலான நிறுவனங்கள் நிலத்தை தங்கள் பெயருக்கு கிரையம் பெற்று அதை மேம்படுத்தி மீண்டும் விற்பனை செய்யும் நிலையில் செலவு குறைப்புக்கான வழிகளை தேடுகின்றன. இதில் நில உரிமையாளரிடம் இருந்து கிரையம் பெறுவதை கட்டுமான, ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் தவிர்க்கின்றன.
இதனால், ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் நில உரிமையாளரிடம் இருந்து பொது அதிகாரம் பெற்று அதன் அடிப்படையில் மனைப்பிரிவு திட்டங்களை செயல்படுத்துகின்றன. இதில் ஒரு குறிப்பிட்ட உரிமையாளரிடம் இருந்து மட்டும் நிலம் வாங்கினால் போதாது என்பதால் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களிடம் இருந்து நிலம் பெறப் படுகின்றன.
இவ்வாறு, ஒரே சமயத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களிடம் இருந்து நிலம் பெற்று அதை தொகுத்து மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்தும் நிறுவனங்கள் அனைத்து நிலத்தையும் கிரையமாக பெறுவதை தவிர்க்கின்றன. இதில் ஒவ்வொரு உரிமையாளரிடமும் கிரையம் பெறும் நிலையில், பத்திரப்பதிவு செலவு வெகுவாக அதிகரிக்கும்.
செலவை சமாளிக்க ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், நில உரிமையாளரிடம் இருந்து பொது அதிகாரம் பெற்று திட்டங்களை செயல்படுத்துகின்றன. இதில் நில உரிமையாளர்கள், ரியல் எஸ்டேட் நிறுவனம் இடையே எவ்வித பிரச்னையும் இல்லாத வரை பாதிப்பு ஒன்றும் இல்லை.
ஆனால், நில உரிமையாளர்கள் யாராவது ஒருவர் அல்லது ஒன்றுக்கு மேற்பட்டோர், ரியல் எஸ்டேட் நிறுவனத்துடன் பிரச்னையில் ஈடுபட்டால், அந்த சொத்து வாங்கும் மக்களுக்கு பிரச்னையை ஏற்படுத்தும். இது போன்ற விவகாரங்களில் நில உரிமையாளர்கள், ரியல் எஸ்டேட் நிறுவனம் இடையிலான உறவு குறித்து கவனமாக பார்க்க வேண்டும்
பொது அதிகாரம் கொடுத்த நில உரிமையாளர்களின் ஒத்துழைப்பு அடிப்படையில் தான் ஒவ்வொரு மனைப்பிரிவு திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. இதில் நில உரிமையாளர்களுடன் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்கின்றனர் கட்டுமான துறை வல்லுனர்கள்.

