sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

கனவு இல்லம்

/

வீடு பராமரிப்பு

/

வீட்டினை அழகாக்கும் 5 கொடி தாவரங்கள்!

/

வீட்டினை அழகாக்கும் 5 கொடி தாவரங்கள்!

வீட்டினை அழகாக்கும் 5 கொடி தாவரங்கள்!

வீட்டினை அழகாக்கும் 5 கொடி தாவரங்கள்!


UPDATED : ஜூலை 16, 2023 08:42 PM

ADDED : ஜூலை 16, 2023 08:28 PM

Google News

UPDATED : ஜூலை 16, 2023 08:42 PM ADDED : ஜூலை 16, 2023 08:28 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வீட்டின் முகப்பில் பசுமையாகவும், வண்ணமயமாகவும் செடி கொடிகள் இருந்தால் அது அந்த இடத்திற்கு நல்லதொரு வைபை தரும். வெயில், மழைக் காலங்களில் அது வீட்டிற்கு மேலும் அழகு சேர்க்கும். அத்தகைய 5 தாவரங்கள் இங்கே... இதனை நட்டு வளர்த்து உங்கள் வீட்டையும் பசுமையாக்குங்கள்.

நித்திய மல்லி

Image 1141569
நித்தியமல்லி பல வகையான பெயர்களில் அழைக்கப்பட்டு வருகிறது. ஸ்டார் ஜாஸ்மின் என ஆங்கிலத்தில் சொல்வார்கள். மிக வேகமாக வளரும் இதன் கொடி மிகுந்த வாசனையுள்ள மலர்களை வாரி வழங்கும். இதனை வீட்டின் முகப்பில் ஏற்றினால், நுழையும் போதே நல்ல ஒரு மணம் கமழும். இது அதிகம் பராமரிப்பைக் கோராது.

இச்செடியில் வேரழுகல் நோய் வராமலிருக்க அடிக்கடி அதற்கு சிட்ரஸ் நிறைந்துள்ள ஆரஞ்சு பழத்தோல் அல்லது எலுமிச்சை பழ தோல் போன்றவற்றை வெயிலில் நன்கு காய வைத்து கொஞ்சமாக வேரில் தூவி விடலாம்.

ரங்கூன் மல்லி

Image 1141574
ரங்கூன் மல்லி அல்லது பர்மா மல்லி எனும் இந்த கொடி 8 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. இதன் மலர்கள் இளஞ்சிவப்பு வண்ணத்தில் நீள்வட்ட இதழ்களுடன் இருக்கும். உதிரும் போது சிவப்பு நிறமாக மாறிவிடும். வண்ணமயமான இந்த கொடியும் வீட்டில் வளர்க்க ஏற்றது.

கர்டைன் கொடி


Image 1141570
இது ஒரு பிரபலமான தாவரம். வீடுகள், அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளில் இதனை அழகிற்காக வளர்க்கிறார்கள். இது பசுமையான திரையை உருவாக்கும். இதற்கு பராமரிப்பு பெரிதாக தேவையில்லை.

காகிதப் பூ


Image 1141575
போகன்வில்லா அல்லது காகிதப் பூ இளஞ்சிவப்பு, சிவப்பு, ஆரஞ்சு, வெள்ளை, மஞ்சள் என பல வண்ணங்களில் கிடைக்கும். இதனை மதில் சுவர் ஓரம் நட்டால் வீடே வண்ணம் பூத்துக் குலுங்கும்.

மணி பிளான்ட்


Image 1141573
இதுவும் பிரபலமான உள்ளரங்க செடி. எளிதில் வளரும். இதனை வீட்டு ஜன்னல்களில் கண்ணாடி குடுவையில் தண்ணீர் ஊற்றி வளர்க்கலாம். தொட்டிச் செடியாக தொங்கவிடலாம். இவை அனைத்தும் உங்கள் வீட்டிற்கு அழகுச் சேர்க்கும்.






      Dinamalar
      Follow us