sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

கனவு இல்லம்

/

வீடு பராமரிப்பு

/

எம் சாண்ட் தரத்தை அறியும் வழிமுறைகள்..!

/

எம் சாண்ட் தரத்தை அறியும் வழிமுறைகள்..!

எம் சாண்ட் தரத்தை அறியும் வழிமுறைகள்..!

எம் சாண்ட் தரத்தை அறியும் வழிமுறைகள்..!


UPDATED : ஜூலை 01, 2023 07:16 PM

ADDED : ஜூலை 01, 2023 05:40 PM

Google News

UPDATED : ஜூலை 01, 2023 07:16 PM ADDED : ஜூலை 01, 2023 05:40 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒவ்வொருவரின் கனவு நமக்குப் பிடித்த மாதிரி சிறிய அளவில் ஓர் வீட்டைக் கட்ட வேண்டும். அப்படிக் கட்டும் வீட்டைத் தரமானதாகக் கட்டி விட வேண்டும் என்பது தான் எல்லோருடைய ஆசையும். நமது கனவு வீட்டை நினைவாக்குவதற்கு முக்கியமானது மணல். ஆரம்பத்தில் வீடுகள் அனைத்தும் ஆற்றுமணல் கொண்டே கட்டப்பட்டது. இதனால் அதன் தரம் என்பது பரிசோதிக்கும் அளவுக்கு இல்லை. ஆனால் தற்போது ஆற்று மணல் தட்டுப்பாடு காரணமாகச் செயற்கை மணல்களின் வரவு அதிகரித்து விட்டது.

வெளிநாடுகளிலிருந்தும் மணல் இறக்குமதி செய்யப்பட்டாலும், தேவை அதிகம் இருப்பதால், செயற்கை மணல் என்று சொல்லக்கூடிய எம் சாண்டிற்கு மாறும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆற்றுமணலை விடத் தரமானது எம் சாண்ட் என நிபுணர்கள் உத்தரவாதம் அளித்தாலும், இதிலும் போலி மணல்கள் அதிகம் உள்ளது. இப்படி இருக்கும்பட்சத்தில் தரமான எம்சாண்ட் மணலை தேர்ந்தெடுத்து வீடு கட்டுவது தரமாக இருக்குமாக? என்பதை அறிந்து கொள்வது அவசியமாகும்.

இந்த மணல் சந்தைக்கு வந்து வருடங்கள் ஓடி விட்டாலும், மக்களிடம் இன்னமும் சந்தேகம் இருக்கத் தான் செய்கிறது. அப்படி எழும் இந்த சந்தேகங்கள் இந்த பதிவின் மூலம் தீர்த்துக் கொள்ளலாம்.

எம் சாண்ட்


கான்கீரிட் வீடுகள் அமைக்க எம் சாண்ட் மணல் சிறந்த தேர்வாக இருக்கும். வீடு கட்டுவதற்கான இந்த மண்ணில் எந்த கலப்படமும் இல்லை. ஆனால் ஆற்றுமணலில் அதிகம் கலப்படம் இருக்கிறது. அதில் சிலிக்கான் என்றும் நுண் துகள் இருக்கும்.

எம் சாண்ட் மணலில் குறை ஒன்று உள்ளது. அது என்னவென்றால், இதில் உள்ள துகள்கள் ஒழுங்கற்ற முறையில் இருக்கும். இதில் நன்றாகச் சலித்த மணலையே பூச்சு வேலைக்குப் பயன்படுத்த வேண்டும். இந்த மணலின் ஈரப்பதத்தை குறைத்து கட்டும் போது சுவரில் விரிசல் விழ வாய்ப்புள்ளது.

ஆற்றுமணலில் ஈரப்பதம் அதிகம் இருக்கும். அதுவே எம் சாண்ட் மணல் கொண்டு கலவை தயார் செய்யும் போது ஈரப்பதத்தை அதிகம் வைத்திருக்க வேண்டும்.

கட்டடத்தின் உறுதித் தன்மையை பொறுத்தவரையில் எம் சாண்ட் மணல் கொண்டு கட்டும் கட்டடங்கள் தான் அதிகளவில் உறுதியாக இருக்கும். அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் எம் சாண்ட் கொண்டே கட்டடங்கள் கட்டப்படுகிறது.

சோதனைகள் அடிப்படையில் ஆற்று மணலை விட, எம் சாண்ட் மணல் சிறந்தது என நிரூபிக்கப்பட்டுள்ளது.

கவனிக்க வேண்டியவை


எம் சாண்ட் மணல் கருப்பு நிறத்தில் இருக்கும், இதில் சந்தேகம் இருந்தால், எம்சாண்ட வாங்கும் நிறுவனத்தின் ஆய்வகம் இருக்கும்.அதில் பரிசோதனை செய்து வாங்குவது சிறந்தது ஆகும். ஏனெனில் எம் சாண்ட் மணலில் சிமெண்ட் மற்றும் மணல் கலவையானது சரியான விகிதத்தில் இருக்க வேண்டும்.

எம் சாண்ட் கருப்பு நிறத்தில் இருப்பதால், குறைவான சிமெண்ட் கலந்தால் கண்டறிவது கடினம். ஆகையால் இதனைப் பரிசோதிப்பதே சிறந்தது ஆகும். இதில் 4எம் எம் அளவு கொண்ட மணல் சுவர் வேலைக்கும், 2எம் எம் அளவு கொண்ட மணல் பூச்சு வேலைக்கும் பயன்படுத்த வேண்டும். இதில் குழப்பம் வேண்டாம்.






      Dinamalar
      Follow us