தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/கண்ணம்மா/அவளே சரணம்/அக்கரை அதிசயம்

அக்கரை அதிசயம்

அக்கரை அதிசயம்


PUBLISHED ON : ஜன 15, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 15, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மனித இனத்தின் வரலாற்றில் பயணப்பட்டால் அறுந்த அடிமைச்சங்கி லிகள் குவியல் குவியலாகத் தென்படும். தன் தீரத்தால் அடிமைச்சங்கி லியை அறுத்த வீரத்தின் கதை இது; திருத்தணி, கன்னிகாபுரம் இருளர் காலனியில் வசிக்கிறார் வீரப்பெண் வரலட்சுமி.

மாயவலை

நானும் என் கணவரும் வேற வேற ஜாதி; குடும்பத்துல எங்க திருமணத்திற்கு எதிர்ப்பு; 15 வயசுல குடும்பத்தை பிரிஞ்சு அவரோட வந்தேன். திருமண செலவுக்காக அரிசி ஆலை முதலாளிகிட்டே என் கணவர் 5,000 ரூபாய் கடன் வாங்கியிருந்தார். அதை அடைக்க அவர்கிட்டே வேலைக்கு சேர்ந்தோம்; அடுத்த 8 வருஷமும்... நரகம்!

கொடுங்களம்

சாயங்காலம் 5:00 மணிக்கு நெல் அவிக்க ஆரம்பிச்சா அதிகாலை 3:00 மணி வரைக்கும் அசையவிட மாட்டாங்க! கழிவறை நேரத்தைக் கூட கணக்கு பார்ப்பாங்க. எதிர்த்துப் பேசினா உடனே கடன் அடைக்கச் சொல்லி மிரட்டுவாங்க!

இன்று, 'விடுவிக்கப்பட்ட கொத்தடிமைகள் மறுவாழ்வு சங்கம்' வழியே தன்னைப் போன்றோருக்கு வழிகாட்டியாக இருக்கிறார் வரலட்சுமி; 'வர்ணம்' எனும் பெயரில் அச்சு முறையில் ஆடைகளை அழகூட்டும் சுயதொழில் செய்து வருகிறார்.

தன்னந்தனியே...

'பிரசவ வலி வந்திருச்சு'ன்னு முதலாளிகிட்டே சொன்னப்போ அவர் கண்டுக்கலை! கழிவறைக்குப் போறதா சொல்லி தப்பிச்சேன். 'ஒரு உசுரைத்தான் காப்பாத்த முடியும்'னு டாக்டருங்க சொன்னப்போ, 'குழந்தையை காப்பாத்திருங்க'ன்னு கும்பிட்டேன். பக்கத்துல கணவர் இல்லாததால, 'பாட்டி'ன்னு சொல்லி ஒரு அம்மாவை கையெழுத்து போட வைச்சேன்!

பெருங்கண்ணீர்

மகளை விடுதியில சேர்த்து படிக்க வைச்சிட்டு இருந்தேன். ஒருதடவை ஊருக்கு வந்தவ ஆலையில என்னைப் பார்த்ததும், 'அம்மா...'ன்னு ஓடிவந்து கட்டிக்கிட்டா! இதைப் பார்த்த முதலாளி, 'உங்க கடனுக்கு வட்டி அதிகமாயிருச்சு; மகளையும் நெல்லு அவிக்கச் சொல்லு'ன்னு போயிட்டார். 'இனி மகளை படிக்க வைக்க முடியாது'ன்னு அன்னைக்கு நான் விட்ட கண்ணீர் என்னைக்கும் காயாது!

தற்போது, தன் பகுதி மக்களுக்கு அரசின் திட்டங்கள் கிடைக்க உதவுகிறார் வரலட்சுமி. லஞ்சம் எதிர்பார்த்த பணியாளரை உயர் அதிகாரியிடம் சிக்க வைத்து உரிமை வென்றிருக்கிறார்.

சீற்றம்

கொத்தடிமைகளா மாட்டிக்கிட்ட எங்களைப் பற்றி அரசு தரப்புக்கு தெரியப்படுத்த லாரி ஓட்டுனரை வைச்சு ஒரு திட்டம் போட்டேன். அரசுக்கு தகவல் போய் ஒரு வருஷம் ஆகியும் யாரும் வரலை. நம்பிக்கை இழந்திருந்த ஒருநாள் மதியம் ஆர்.டி.ஓ., ரெய்டுக்கு வந்தார்; எங்க அடிமைச்சங்கிலி அறுந்தது.

ஆசைகள் 1000

* பேத்தி 'பச்சை மை'யில கையெழுத்து போடணும்* எங்க பகுதியில எல்லாரும் படிக்கணும்* அடிமை தொழிலாளர்களே இருக்கக் கூடாது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us