தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/கண்ணம்மா/அவளே சரணம்/முதல்வர் பேசுகிறேன்!

முதல்வர் பேசுகிறேன்!

முதல்வர் பேசுகிறேன்!


PUBLISHED ON : நவ 04, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 04, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நான் மேரி வினோதினி. கல்விப்பணியில இது எனக்கு 29வது ஆண்டு; 19 ஆண்டுகள் ஆசிரியராகவும், 10 ஆண்டுகள் முதல்வராகவும் அனுபவம். இப்போ, விழுப்புரம் ஒலக்கூர் எம்.டி.கிரேன் நிதியுதவி நடுநிலைப்பள்ளியின் முதல்வர்.

என் பெயர் செயல்

தினசரி காலையில பள்ளிக்குள் நுழையுற முதல் நபரும், மாலையில் வெளியேறுற கடைசி நபரும் நான்தான்! ஆங்கில பட்டதாரியா இருந்தாலும் தமிழ், சமூக அறிவியல் பாடங்களையும் மாணவர்களுக்கு பயிற்றுவிக்கிறேன். நிர்வாகப் பணியோட சேர்த்து கற்பிக்கும் பணியையும் திறம்பட செய்ய முடியும்னு நிரூபிச்சிருக்கேன்.

என் பெயர் பொறுமை

எங்க பள்ளி நிர்வாகத்தை சார்ந்தது... ஐடா ஸ்கடர் மாணவியர் காப்பகம். இங்கேயிருந்து, 82 குழந்தைகள் எங்க பள்ளிக்கு வர்றாங்க; பெற்றோரை இழந்த பிள்ளைகள், செங்கல் சூளை தொழிலாளர்களின் பிள்ளைகள் இதுல அடக்கம். சராசரி குழந்தைகள் மாதிரி, இவங்களுக்கு பாடத்துல உடனடியா ஆர்வம் வந்துடாது. அவங்களோட நட்பாகி, கல்வியோட பெருமைகளை கொஞ்சம் கொஞ்சமா புரிய வைச்சு ஜெயிக்க வைக்கணும்.

என் பெயர் உறுதி

எங்க பள்ளியில என் தலைமைக்கு கீழே 8 ஆசிரியர்கள் இருக்குறதா நான் நினைச்சதில்லை; 'என்னையும் சேர்த்து 9 ஆசிரியர்கள்'னுதான் எங்கேயும் சொல்லுவேன். என்னை முன் நிறுத்தாம சக ஆசிரியர்களுக்கும் எல்லா வாய்ப்புகளையும் தர்றப்போ எனக்குமே புது விஷயங்கள் தெரியவரும். 'உறுதியான தலைமை'ங்கிறது அதிகாரத்தை பகிர்ந்துக்கிறதுதானே!

என் பெயர் அன்பு

அரசு தர்ற சத்துணவுக்காகவே பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புற ஏழை பெற்றோரும் உண்டு. அவங்ககிட்டே, 'மது அருந்திட்டு வீட்ல சண்டை போடக்கூடாது; கெட்ட வார்த்தைகளை குழந்தைகள் முன்னாடி பேசக்கூடாது'ன்னு சில அறிவுரைகளை போதிக்க வேண்டியிருக்கு; 'இது என் வேலை கிடையாது'ன்னு ஒதுங்கி நிற்க மனசு வரலை!

என் பெயர் அக்கறை

இந்த சமூகத்தைப் பார்த்து நான் பயப்படுறது ஒரே விஷயத்துக்காகத்தான்; அது, போலி பகட்டு; யதார்த்த மொழியில சொன்னா... கெத்து!

இந்த வியாதி பெற்றோரை ரொம்பவே வாட்டி எடுக்குது; அவங்ககிட்டே இருந்து குழந்தைகளுக்கும் தொற்றிக்குது. ஆடம்பர வாழ்க்கையினால மாணவ பருவத்திலேயே பிள்ளைகள் தடம் மாறுற வாய்ப்பை பெத்தவங்களே ஏற்படுத்தி தர்றது கொடுமை.

என் பெயர் மனம்

'வகுப்பறையில குழந்தைகள் முகத்தை பார்க்குற வாய்ப்பு மறுபடியும் எப்போ கிடைக்கும்'னு ஒவ்வொரு நாளும் ஏங்கிட்டு இருக்குறேன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us