தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/கண்ணம்மா/அவளே சரணம்/முதல்வர் பேசுகிறேன்!

முதல்வர் பேசுகிறேன்!

முதல்வர் பேசுகிறேன்!


PUBLISHED ON : பிப் 27, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 27, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வணக்கம்; நான் செ.சுமதி; 1988ம் ஆண்டுல இருந்து திருவாரூர், மெய்பொருள் அரசு உதவிபெறும் துவக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியை!

'திருவாரூர் தியாகராஜர் கோவிலில் பஞ்சமுக வாத்தியமும், தட்சிண காளி கோவிலில் சுத்த மத்தளமும் வாசிக்கும் பெண்' - இது என் சிறப்பு அடையாளம்!

அன்பு கேடயம்

ஒரு பையனை கண்டிச்சதுக்காக அவங்க குடும்பமே கதிர் அரிவாளோட பள்ளிக்கு வந்துட்டாங்க. வரவேற்று தேநீர் கொடுத்தேன். பருகுற இடைவெளியில நடந்த சம்பவங்களை விவரிச்சேன். இன்னைக்கு நான் அவங்க ஊருக்குப் போனா, 'வாம்மா... தங்கச்சி'ன்னு அந்த பையனோட அப்பா உபசரிக்கிறாரு!

தாய் பறவை

வகுப்பறையில மாணவர்கள் சந்தோஷமா இருந்தாத்தான் சொல்லிக் கொடுக்குறது மூளையில தங்கும். அதனால மாணவர்களோட சவுகரியத்திற்கு நான் ரொம்பவே முக்கியத்துவம் கொடுப்பேன். அன்றாடம் மாணவர்களோட அமர்ந்து சாப்பிடுறது என் பழக்கம். அந்த தருணத்துல என் சிறகுகளுக்குள்ளே குஞ்சுப் பறவைகளை உணர்வேன்.

பள்ளிக்கூடம்

'பின்தங்கிய குடும்ப சூழல்ல இருந்து வர்ற மாணவர்கள் முன்னேற நாம காரணமா இருக்கணும். 'அந்த பள்ளியாலதான் நான் இப்படி இருக்கேன்'னு எதிர்காலத்துல அவங்க சொல்லணும். அந்த வார்த்தைகள்தான் இப்போ நாம செய்ற வேலைக்கான நற்சான்று!' - இதுதான் சக ஆசிரியர்களுக்கு என் அறிவுரை.

என் பயம்

என்கிட்டே படிச்ச ஒரு மாணவன் 21 வயசுலேயே திருமணம் பண்ணிக்கிட்டான். 'மதுவே வாழ்க்கைன்னு இருக்குற என் அப்பாவுக்கும் எனக்கும் பிரச்னை; அதான் என் வாழ்க்கையை நானே பார்த்துக்கலாம்னு இருக்கேன்'னு சொன்னான். மது இந்த சமூகத்தை இன்னும் என்னென்ன செய்யப் போகுதோ!

நோய்கள் ஜாக்கிரதை

கடந்த இரண்டு ஆண்டுகளா பள்ளி இயங்காத சூழல் நிறைய மாணவர்களை பாதிச்சிருக்கு; செல்போன்ல தவறான விஷயங்களை நோக்கி குற்றவுணர்வு இல்லாம பயணப்படுறாங்க; குடும்ப சண்டைகளை அதிகமா பார்த்து மனசளவுல பாதிக்கப்பட்டிருக்காங்க; 'பெற்றோர் குழந்தைகளுக்கு நோய்களா மாறிட்டாங்களோ'ன்னு தோணுது!

ஆண் என்றால்...

'பெண் பிள்ளைகளை தைரியத்தோட வளர்க்குற அதேநேரத்துல ஆண் பிள்ளைகளை ஒழுக்கமா வளர்க்குறோமா; வகுப்புல மாணவியரை மதிக்கணும்னு சொல்லி வளர்க்கப்படுற ஆண் குழந்தைகள் எத்தனை பேர்?' - இந்த சிந்தனை சமூகத்துக்கு மிக அவசியம்னு நினைக்கிறேன்!

மனசுதான் சாமி

என் ஒரே மகள், என்னால இயலாத சூழல்ல சுத்த மத்தளம், பஞ்சமுக வாத்தியம் வாசிக்கிறா! எதிர்காலத்துல எல்லா பொறுப்புகளையும் அவகிட்ட ஒப்படைச்சிட்டு, கைவிடப்பட்ட முதியோர்கள், கல்விக்காக ஏங்கும் குழந்தைகளோட ஒரு பெரிய வீட்டுல என் வாழ்க்கையை கழிக்கணும்னு ஆசை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us