தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/கண்ணம்மா/அவளே சரணம்/திருமதி விவசாயி

திருமதி விவசாயி

திருமதி விவசாயி


PUBLISHED ON : பிப் 06, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 06, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தொடர்ச்சியாக செய்யும் காரியங்கள் யாவும் அனுபவத்தையும் ஒருகட்டத்தில் சலிப்புணர்வையும் வழங்கும். காளான் வளர்ப்பில் 17 ஆண்டு அனுபவம் பெற்ற செங்கல்பட்டு சுந்தரிக்கும் அப்படியான சலிப்புணர்வு உண்டு; அதை அவர் களைவது எப்படி?

கணவர்-சேகரன்

படிப்பு-10ம் வகுப்பு

வயது-58

வைராக்கியம்

என் கணவர் பி.எஸ்சி., இயற்பியல் படிச்சவர். தென்னை, வாழை, பட்டுப்புழு வளர்ப்புன்னு விவசாயத்துல நிறைய முயற்சி செஞ்சும் அவரால பெரிய வெற்றியை பார்க்க முடியலை; காளான் வளர்ப்பை தேர்வு பண்ணினார்.

காளான்ல சிப்பி காளான், பால் காளான் பராமரிப்புதான் சுலபம். 25 -- 28 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை போதும்; இதுக்காக, காளான் வளர்ற கொட்டகைக்குள்ளே ஈரமான சாக்குகளைப் போட்டு, கொட்டகையைச் சுற்றி பச்சை நிழல் வலையால மூடி வைக்கணும்.

தொற்று நீக்கத்துக்காக வேக வைச்ச வைக்கோலை பாலித்தீன் பையில நிரப்பி காளான் விதைகளை துாவி, பையோட மேற்புறத்தை இறுக்கமா கட்டி உரியில தொங்க விடணும். விதைச்சு 20 நாள்ல அறுவடை பண்ணிக்கலாம்.

கடந்த 17 ஆண்டுகளா இதுதான் பணி; சலிப்புதான்; ஆனா, என் கணவரோட முயற்சி இன்னொரு தடவை தோத்துடக் கூடாதுங்கிற வைராக்கியத்துல தீவிரமா உழைச்சுட்டு இருக்குறேன்.

கல்பாக்கம் - மரக்காணம் சாலையில் 40வது கி.மீ., தொலைவில் உள்ளது இவரது கோட்டைக்காடு கிராமம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us