தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/கண்ணம்மா/அவளே சரணம்/நங்கையர் திலகம்!

நங்கையர் திலகம்!

நங்கையர் திலகம்!


PUBLISHED ON : பிப் 16, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 16, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கற்பகத்தால் மறக்க முடியாத இடம்... அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லுாரி. கற்பகத்தால் மறக்க முடியாத ஆண்டு... 2011. கற்பகத்தால் மறக்க முடியாத வார்த்தை... 'நீயெல்லாம்...'

என்ன நடந்தது கற்பகம்?

கல்லுாரி படிப்பிற்காக மாற்றுத்திறனாளி சான்றிதழ் கேட்டு ஒரு மருத்துவர்கிட்டே போய் நின்னேன். 'நீயெல்லாம் படிச்சு என்ன பண்ணப் போறே?'ன்னு கேட்டு சான்றிதழ் தந்தார். அந்த நிமிஷம் துடிச்சுப் போய் அழுதேன். அப்புறம், பயோ மெடிக்கல் இன்ஜினியரிங்கை சிறப்பா படிச்சேன்.

ஆனாலும், 'நீயெல்லாம்'ங்கிற வார்த்தை உள்ளுக்குள்ளே ஏதோ பண்ணிட்டே இருந்தது. என் குரல் இன்னும் உரக்க ஒலிக்கணும்னு தோணுச்சு. மாற்றுத்திறனாளிகளோட குரலா, ஆதரவில்லாதவங்களோட குரலா நான் இருக்கணும்னு முடிவு பண்ணி இன்ஜினியரிங் முடிச்சவுடனே சட்டம் படிச்சேன். இப்போ, சென்னை உயர் நீதிமன்றத்துல வழக்கறிஞரா இருக்குறேன்.

கற்பகத்தின் குரல் என்ன சாதிச்சிருக்கு?

'தமிழகத்துல இருக்கிற ஒருசில கோவில்கள் தவிர்த்து பெரும்பாலானவை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்துற வகையில இல்லை'ன்னு பொதுநல வழக்கு போட்டிருக்கேன்; வழக்கு நிலுவையில இருக்கு. 'கொரோனா' காலத்துல ஆதரவில்லாம தவிக்கிற மனநலம் பாதிக்கப்பட்டவங்களை காப்பாத்தணும்னு பொதுநல வழக்கு போட்டேன்; 250க்கும் அதிகமானவர்களை பத்திரமா மீட்டு தமிழக அரசு பாதுகாத்திருக்கு.

இப்படி வழக்குகள் ஒருபக்கம் இருக்க, என்னை மாதிரியான சிந்தனை உள்ளவர்களோட இணைஞ்சு மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குறேன். இதுவரைக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான வழக்குகளுக்கு ஊதியம் வாங்கினதில்லை; இனி, வாங்கப்போறதும் இல்லை!

அம்மா - அப்பா, தம்பியோடு சென்னை முகப்பேரில் வசித்துவரும் 26 வயது மா. கற்பகத்திற்கு, வலக்கண்ணில் பார்வை துளியும் கிடையாது; இடக்கண்ணில் 50 சதவீத பார்வை மட்டுமே!

திருமணம், குடும்பம்... இதைப்பற்றியெல்லாம் கற்பகத்தோட எண்ணம்?

எளியவர்களோட துயர் துடைக்கணும்னு ஓடிட்டு இருக்குறேன். இந்த ஓட்டத்துல என் திருமணத்தை பற்றியெல்லாம் இப்போவரைக்கும் யோசிக்கலை.

'கற்பகத்தோட பலம் குடும்பம்'னு சொல்லலாமா?

சொல்லலாம்; பாதி என் குடும்பம்... மீதி என் வைராக்கியம்! கல்லுாரி காலம் வரைக்கும் டியூஷன் எடுத்து சுயமா சம்பாதிச்சவ நான்!

யாரோட உதவியும் இல்லாம பயணிக்கிறது...?

பெரும் போராட்டம்தான்; இறங்க வேண்டிய முகப்பேருக்கு பதிலா ஆவடி வரைக்கும் பயணம் பண்ணின அனுபவமும் எனக்கிருக்கு!

அந்தசமயத்துல யாருமே உதவ முன்வரலைன்னு புரிஞ்சுக்கலாமா?

இல்லை; 'கற்பகம் யாரையும் சார்ந்து இருக்க மாட்டா'ன்னு புரிஞ்சுக்கோங்க.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us