தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/கண்ணம்மா/அவளே சரணம்/நங்கையர் திலகம்!

நங்கையர் திலகம்!

நங்கையர் திலகம்!


PUBLISHED ON : ஆக 07, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 07, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சமீபத்திய செய்தி இது; 8 வயது சிறுமியை 74 வயது நபர் பாலியல் பலாத்காரம் செய்தது, 3 மாதங்கள் கடந்து அச்சிறுமி பாம்பு தீண்டி இறந்த பின்பே வெளிச்சத்திற்கு வருகிறது. இதுதான் இன்றைய சமூகத்தின் நிலை!

ராணியின் பார்வையில் சமூகம்?

இன்றைய குடும்பங்கள்ல வெளிப்படைத் தன்மை இல்லை; குழந்தைங்ககிட்டே தைரியம் இல்லை; இதனால அதிகமா பாதிக்கப்படுறது பெண்கள்தான்! ஒரு குடும்பத்தோட சீரழிவு சமூகத்துல பிரதிபலிக்கத்தான் செய்யும்!

சென்னை, குரோம்பேட்டையில் வசிக்கும் ராணிக்கு வயது, 56; 1979ல் திருமணம்; கணவரின் தீய பழக்கங்களால் அவருடன் முரண் இருப்பினும் 2 மகன், ஒரு மகளைப் பெற்று வளர்த்து வந்தார். தான் உணவகம் நடத்தி சம்பாதிக்கும் பணம் கணவரின் சட்டைப்பைக்கு செல்கையிலும் ராணியிடம் பெரும் பொறுமை! ஒருநாள்...

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி, குற்றவாளிக்கு தண்டனை; இது போதுமா?

கண்டிப்பா போதாது! ஒட்டுமொத்த சமூகத்துக்குமே பெண் பாதுகாப்புல விழிப்புணர்வு தேவைப்படுது; குறிப்பா, 'பெண்ணை எப்படி நடத்தணும்'னு ஆணுக்கு குடும்பம் கத்துக் கொடுக்கணும்!

கணவரின் நடவடிக்கையில் பொறுமை இழந்த அந்நாளில், குழந்தைகளுடன் நிரந்தரமாய் தாய் வீடு திரும்புகிறார் ராணி. பிப்ரவரி 22, 2000; இரவு 7:15 மணி; ஆலையில் பணி முடித்து வீடு திரும்பிக் கொண்டிருக்கிறார்; அப்போது...

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்வதில் பெண்களின் பங்கு?

அமில வீச்சுக்கு உள்ளான ஒரு பெண், காரணமானவனை எதிர்த்துப் போராட யோசிக்கிறா! 'ஏன்'னு கேட்டா, 'கல்யாணம் பண்ணிக்கிறேன்'னு அவன் சத்தியம் பண்ணியிருக்கானாம்!

அந்த பிப்ரவரி 22 மாலையில்... தன் பின்னால் யாரோ வருவது போன்ற உணர்வில் ராணி திரும்பிப் பார்க்க, அவர் மீது அமிலம் ஊற்றப்படுகிறது. உச்சந்தலையில் இருந்து வலதுபக்க காது, கன்னம், கழுத்து மற்றும் கைகள் வரை சதை வெந்து உதிர்கிறது. 'ஊற்றியது யார்' என்பதை விளக்க வேண்டுமா என்ன!

சட்டப் போராட்டத்தில் வெற்றி கிடைத்ததா ராணி?

(சிரிக்கிறார்) ராணி ஏழையல்லவா; என்ன நீதி கிடைத்திருக்கும் என்பதை அவரது சிரிப்பு உணர்த்தியது. இதுவரை, 25க்கும் மேலான அறுவை சிகிச்சைகளுக்கு உள்ளாகி இருப்பவர், கைவிடப்பட்ட பெண்களுக்கு தையல் பயிற்சி அளிக்கிறார்; அமிலத் தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்கு ஆதரவாக நிற்கிறார்; தன் மூன்று பிள்ளைகளை கரையேற்றி சாதித்திருக்கிறார்.

என்ன சொல்லுது வாழ்க்கை?

'அறுவை சிகிச்சை பண்ணி முகத்தை மாத்திக்கிறேன்'னு சொன்னதுக்கு, 'வேணாம்... எனக்கு இந்த முகம்தான் பிடிச்சிருக்கு'ன்னு என் பேத்தி சொல்லிட்டா; நிறைவா இருக்கு வாழ்க்கை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us