தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/கண்ணம்மா/அவளே சரணம்/அவளே சரணம்!

அவளே சரணம்!

அவளே சரணம்!


PUBLISHED ON : டிச 03, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 03, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இலங்கையின் தலைமன்னாருக்கும் தமிழகத்தின் தனுஷ்கோடிக்கும் இடை யிலான கடல் பகுதியை நீந்தி கடந்து சாதித்திருக்கிறார், 16 வயது ஹரேஷ் பரத்மோகன்; பரத்மோகன் என்பவர் அப்பா; ஹரேஷின் சாதனையில் அம்மாவிற்கான அங்கீகாரம்?

'ஹரேஷ் நிர்மலாதேவி'ன்னு என் மகன் அடையாளப்படுறதுல தான் எனக்கும் விருப்பம். ஆனா, 'நம்ம பையன் பெயருக்கு பின்னால உங்க பெயர் இருக்கிறதுதான் எனக்கு பெருமை'ன்னு என்னை சமாதானப்படுத்தினது என் மனைவிதான்! இன்னொரு உண்மை என்னன்னா, இந்த வெற்றி என் மகனுக்கானது இல்லை... என் மனைவிக்கானது!' - ஆச்சரியம் விதைக்கிறார் பரத்மோகன்.

அப்படி என்ன செய்தார் நிர்மலா தேவி?

'எல்லாரும் என் மகனை ஒதுக்கி வைச்சு பார்த்தப்போ, 'அவனுக்கு தண்ணீர் பிடிச்சிருக்கு; தண்ணீருக்கு மட்டும்தான் அவன் கட்டுப்படுறான்; நீச்சல் பயிற்சி அவன் தனிமை உணர்வை உடைக்கும்'னு நம்பினது என் மனைவிதான்! இன்னைக்கு, 'நிர்மலாதேவி மகன் சாதிச்சிட்டான்'னு பேசுறாங்க; 'இவர்தான் நிர்மலாதேவியின் கணவர்'னு அடையாளப்படுறதுல எனக்கும் ரொம்ப பெருமை!

சென்னை திருவான்மியூரில் இருக்கிறது ஹரேஷின் வீடு. சுவரில் தொங்கும் இரு சட்டங்களுக்குள், 'ஆசியா புக் ஆப் ரிக்கார்ட்ஸ் மற்றும் இந்தியா புக் ஆப் ரிக்கார்ட்ஸ்' வழங்கிய சான்றிதழ்கள்!

தலைமன்னார் - தனுஷ்கோடி சாதனைக்கு அடிப்படை?

நீச்சல்குள போட்டிகள்ல எதிர்முனைக்கு போயிட்டு, 'திரும்பி வர மாட்டேன்'னு அடம்பிடிக்கிற ஹரேஷ், 12 மணி நேரம் தொடர்ந்து இதுல நீச்சல் பண்ணியிருக்கான்னா, 'என் அம்மாவுக்கு நான் பெருமை தேடித் தருவேன்'ங்கிற அவன் வைராக்கியம் தான் காரணம்!

பேச்சு சப்தம் கேட்டு அறைக்குள் இருந்த ஹரேஷ் வெளியே வர, 'கொஞ்ச நேரம் உள்ளே இருப்பா' என அனுப்பி வைத்த பரத்மோகன், கஜகஸ்தானில் பொறியாளராக பணி செய்கிறார்; மாதம் ஒருமுறை சென்னை திரும்புகிறார். நிர்மலாதேவிக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் நகர திட்ட நிபுணராக தற்காலிக பணி!

இப்படியான சாதனைக்கு அவசியம் என்ன நிர்மலா?

'அறிவுத்திறன் குறைபாடு கொண்ட என் மகனாலேயும் சாதிக்க முடியும்'னு இந்த சமூகத்துக்கு உரக்கச் சொல்லணும்னு நினைச்சேன்; இப்போ, நினைச்சதை சாதிச்சிட்டேன்!

தன்னுடைய ஐந்து வயதில் இருந்து நீச்சல் பயிற்சி பெற்று, பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றிருக்கும் ஹரேஷ், அக்டோபர் 7, 2023ல் இச்சாதனைக்கான 14.4 நாட்டிக்கல் மைல் தொலைவை 11 மணி 52 நிமிடம் 20 வினாடிகளில் கடந்திருக்கிறார்.

உங்க மனசுல இருக்குற பெரிய ஏக்கம் என்ன பரத்?

என் நிர்மலாவை, 'அம்மா...'ன்னு ஒரு தடவையாவது ஹரேஷ் கூப்பிடணும்; அதை நான் கேட்கணும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us