தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/கண்ணம்மா/அவளே சரணம்/பெண்மை என் பெருமை!

பெண்மை என் பெருமை!

பெண்மை என் பெருமை!


PUBLISHED ON : பிப் 13, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 13, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'ரோஜா' என்று அழைப்பதினால் மல்லிகையின் மணம் மாறப் போவதில்லை. இளையராஜா பாடல்களுக்கு வேறொருவரை அடையாளப்படுத்துவதால் அப்பாடல் கேட்பாரற்றுப் போவதில்லை. ஆனாலும், அதனின் பெயர் சரியாக இருக்க வேண்டுமென்பது ஓர் அறம்; அப்படிப்பட்ட அறமே... போதும்பொண்ணு!

பள்ளி சான்றிதழ்களில் தனது மகளின் இனிஷியலாக தன் பெயரின் முதல் எழுத்து வேண்டுமென கரூர், கடவூர் கிராமத்தில் இருந்து உயர் நீதிமன்றத்திற்கு சென்று வெற்றியோடு திரும்பி இருக்கிறார்.

முந்தைய இனிஷியலில் என்ன பிரச்னை?

ஆறு அக்கா, ஒரு தம்பியோட பிறந்த நான் வறுமையான சூழல்ல வளர்ந்தாலும் அந்தந்த நிமிட திருப்திக்காக வாழ்ந்ததில்லை. ஊர் அடையாளத்துக்காக கல்யாணம் பண்ணிக்கிட்டு, குழந்தையைக் கூட பார்க்க வராத ஆளோட நிழலே எங்க மேல படக்கூடாதுன்னு வாழ்றப்போ அந்த இனிஷியலை எப்படி ஏத்துக்க முடியும். என் சுயமரியாதை அதுக்கு இடம் தரலை!

'சுயமரியாதை' நிறைய இழப்புகளைத் தருமே...

உண்மைதான்! அந்த நபர் வழியா எனக்கு சேர வேண்டியது என் உரிமையாவே இருந்தாலும் குண்டுமணி அளவுக்கு கூட எதுவும் வேண்டாம்னு இருக்குறேன். பனியன் மில் வேலையில நான் சம்பாதிக்கிற 6,000 ரூபாய் எங்களுக்கு போதும்! கல்வி உதவித்தொகைக்காக தகுதி தேர்வு எழுத 'ஆன்லைன்'ல பதிவு செய்றப்போ அந்த இனிஷியலை போட வேண்டிய கட்டாயம்! 'இப்படியான ஒரு வாய்ப்பே வேண்டாம்'னு என் பொண்ணு உதறிட்டா. 'சுயமரியாதை'ன்னா அவளுக்கும் இஷ்டம்!

மகள் காவ்யாவை 14 ஆண்டுகளாக தனியொருத்தியாக வளர்க்கும் போதும்பொண்ணு, பெயரின் இனிஷியலுக்காக சுயம் இழக்க நேரிடுமோ என்று கலங்கியிருக்கிறார். இன்று... அவருக்கு பெரும் திருப்தி!

நீதிமன்ற தீர்ப்பு பற்றி...

தீர்ப்பை கேட்டு நான் வேலை பார்க்குற பனியன் மில்லுல நிறைய பெண்கள் கண்கலங்கினாங்க; அந்த கண்ணீர்ல அவங்களுக்கான வெற்றியும் தெரிஞ்சது! எங்களுக்கு மட்டுமில்லை... அடுத்த தலைமுறையான என் மகளுக்கும் இந்த தீர்ப்பு நம்பிக்கையை தந்திருக்கு!

மகள் பற்றிய சிந்தனைகள்...?

இன்றைய சமூக சூழல்ல எனக்கு நடந்த மாதிரியே என் மகளுக்கும் நடக்காதுன்னு உத்தரவாதமா சொல்ல முடியாது. அப்படி ஏதாவது நடந்தா அவ சரிஞ்சு உட்கார்ந்திடாத வகையில அவளை வளர்க்குறேன். 'சட்டம் படிக்கணும்'ங்கிறது அவளோட ஆசை; நிறைவேற்றி தருவேன்.

போதும்பொண்ணு முடிக்க, மனதிற்குள் மின்னலாய் மனுஷ்யபுத்திரனின் கவிதை...

'அழுகை வராமல் இல்லை

ஒரு வைராக்கியம்; உங்கள் முன்

அழக்கூடாதென்று!'

போதும்பொண்ணுவின் புதுப்புது அர்த்தங்கள்!

கவுரவம்? - ஒழுக்கம்

பெயர்? - வேர்

உண்மை? - துணிவு

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us