தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/கண்ணம்மா/அவளே சரணம்/பெண்மை என் பெருமை!

பெண்மை என் பெருமை!

பெண்மை என் பெருமை!


PUBLISHED ON : ஜூன் 19, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 19, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சுவர்களில் செடி, கொடிகள்; வாத்துகள் நீந்த ஓர் இடம்; புறாக்கள், குரங்குகள், அணில்கள் இரை எடுக்க தனித்தனி ஏற்பாடுகள்; சிட்டுக்குருவிகளுக்கு சுரை குடுவைகள்; இயற்கை ஒளியையும் ஊடுருவி மிளிரும் விளக்கொளி; இவற்றுடன், சமூகத்தால் கைவிடப்பட்ட நாய்கள் மற்றும் பூனைகள்; இது... சென்னை, தரமணி உஷா ராஜின் வீடு.

வீடு என்பது...?

ஒரு தொழில்முறை கட்டட வடிவமைப்பாளரா சொல்லணும்னா, வீடு என்பது அதில் வசிப்பவர்களின் பிரதிபலிப்பு. என் வீடு பூமியோட பிணைக்கப்பட்ட ஓர் இடம்!

அர்த்தமுள்ளதா இந்த வாழ்க்கை?

நாமே குட்டையை குழப்பிட்டு 'தண்ணி கலங்கல்'னு குறைபடுறதுல நியாயமில்லை! இங்கே யாருக்குமே இயற்கையோட இணைந்து வாழ விருப்பமில்லை. வளர்ச்சி, வசதி, ஆடம்பரம், நுகர்வு கலாசாரம்னு வாழ்க்கையை கெடுத்துக்கிட்டோம்.

கெட்டதை 'யதார்த்தம்'னும், நல்லதை 'நடைமுறை சாத்தியமற்றது'ன்னும் நம்புறோம்; குழந்தைகளுக்கும் இதைத்தான் சொல்லிக் கொடுக்குறோம்!

அரசு துறையில் ஏற்படுத்த வேண்டிய மாற்றங்கள் மற்றும் திட்ட செயல்பாடுகளில் உள்ள ஓட்டைகளை குறிப்பிட்டு அரசு தலைமை செயலர், சென்னை மாநகராட்சி ஆணையருக்கு தொடர்ச்சியாக கடிதங்கள் அனுப்பி வருகிறார் இந்த 58 வயது உஷா.

இந்த சமூகத்தைப் பற்றிய உங்கள் மதிப்பீடு?

'கருத்தடை அறுவை சிகிச்சைக்காக பிடிக்கப்படுற தெரு நாய்களை மறுபடியும் அதே பகுதியில விடணும்'ங்கிறது விதி. ஆனா, இது முறையா நடக்குறதில்லை! 'கால்நடை மற்றும் விலங்குகள் பராமரிப்பை வைத்து ஒரு சமூகத்தோட மதிப்பை அளவிடலாம்'னு மகாத்மா காந்தி சொல்றார். தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை நடக்கிற இடத்தை போய்ப் பாருங்க... நம்ம சமூகத்தோட மதிப்பு புரியும்!

இதற்கு தீர்வு?

அறிவு சார்ந்து சிகரத்தை எட்டிட்டோமே தவிர மனசளவுல குறுகி நிற்கிறோம். மாணவ சமுதாயத்துல நல்விதைகளை துாவுறது மட்டுமே ஒரே தீர்வு!

உங்கள் கண்ணெதிரே மானை விழுங்கும் மலைப்பாம்பு... என்ன தோணும்?

மானுக்காக யோசிச்சா, 'அது தப்பிச்சு போயிடணும்'னு தோணும்; மலைப்பாம்பை பார்த்தா, 'அதோட பசி தீரட்டும்'னு தோணும்!

பிற உயிர்களின் பசி அறிந்த உஷா ராஜ், தன் வருமானத்தில் இருந்து தினசரி 250க்கும் மேற்பட்ட தெரு நாய்களுக்கு உணவளிக்கிறார்; ஆபத்தான நிலையில் உள்ள நாய்களுக்கு சிகிச்சை தந்து பராமரிக்கிறார். இருப்பினும், தன்னிடம் நாய்களை யாரும் எடுத்து வந்து நீட்டினால் நிராகரிக்கிறார்.

ஏன் இப்படி?

என் கடமையை நான் செய்றேன்; அடுத்தவங்க கடமையை என்னால செய்ய முடியாது; செய்யக்கூடாது.

உஷா ராஜின் புதுப்புது அர்த்தங்கள்

பெண்மை? - செயல்

நாய்? - சொத்து

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us