PUBLISHED ON : ஜூன் 30, 2020

சுதந்திரமா வாழ ஆசைப்பட்டு லண்டன்ல இருக்குற என் பொண்ணு தாரிகாவுக்கும் எனக்கும் இடையில ஒரு வாக்குவாதம்...
'காலேஜ் அட்மிஷனுக்கு இன்னும் நாள் இருக்குப்பா... செலவுக்கு உதவும்னு பகுதி நேரமா வேலைக்குப் போறேன்!'
'அப்போ இனி என் தேவை உனக்கு இருக்காதுல்ல?'
'அப்பா... உங்களுக்கு என்ன பிரச்னை?'
'பிரச்னை எல்லாம் ஒண்ணும் இல்லைம்மா; ஆனா, இந்தமாதிரி சொந்தமா வாழ்ற அளவுக்கு நீ பெரிய மனுஷி கிடையாதுன்னு நினைக்கிறேன்!'
'இப்படி நான் சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதீங்கப்பா; வர வர நீங்க என் விஷயத்துல ரொம்பவே தலையிடுறீங்க!'
'புரிஞ்சுக்கோம்மா... உன்னைவிட இந்த உலகத்தைப் பற்றி எனக்கு நல்லாவே தெரியும்!'
'அப்பா... கிணற்றையே உலகம்னு நம்புற தவளை நீங்க!'
இத்தோட எங்களுக்கிடையில வாதம் முடிஞ்சிடுச்சு.
அடுத்து வந்த சில நாட்கள் நாங்க பேசிக்காம விலகியே இருந்தோம். அந்த விலகல், 'தனித்து இருப்பதல்ல சுதந்திரம்'னு என் பொண்ணுக்கு உணர்த்துச்சு.
குழந்தையா இருக்குறப்போ அவளை இறுக்கிப் பிடிச்ச என் கையை, தளர்த்திக்க வேண்டிய நேரம் வந்திடுச்சுங்கிறதை நானும் உணர்ந்தேன்.
என் பொண்ணு எனக்கு சொல்லிக் கொடுத்த பாடம் இதுதான்...
'மனசு நெருங்கி வரணும்னா கொஞ்சம் விலகி இருக்கணும்!'

