sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

கண்ணம்மா

/

நிழல் பேசும் நிஜம்

/

கோன் கேஷ் (ஹிந்தி)

/

கோன் கேஷ் (ஹிந்தி)

கோன் கேஷ் (ஹிந்தி)

கோன் கேஷ் (ஹிந்தி)


PUBLISHED ON : மார் 19, 2020

Google News

PUBLISHED ON : மார் 19, 2020


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அப்பா, அம்மாவுக்கு தாஜ்மஹால் பார்க்கணும்னு ஆசை; ஆனா அவங்களால அதை நிறைவேத்திக்க முடியலை.

என்ன பண்றது... பணம் இல்லை; என்னோட மருத்துவ செலவுகளுக்கே அவங்க சேமிப்பு அத்தனையும் கரைஞ்சிருச்சு.

நான் எனாக் ஷி - பெயருக்கு ஏத்தமாதிரி பார்க்குறதுக்கும் லட்சணமா இருப்பேன்; இல்ல... இல்ல... இருந்தேன். ஆமா... என் வயசு 16 தான்; ஆனா, தலை முழுக்க வழுக்கை!அழாத நாளில்லை; பெண்ணோட அழகு முகத்துலன்னு நினைச்சிட்டு இருந்தது தப்புன்னு புரிய வைச்சது என் தலைமுடி. என்னை நான் ஒளிச்சுக்க ஆரம்பிச்சேன். அதிக நேரம் தனிமையில கிடந்தேன்.

முதல்ல ஒரு துணியை தலையில போட்டுக்கிட்டேன்; அப்புறம் துப்பட்டா; அடுத்தது குல்லா; 'இப்படியே எத்தனை நாள் உன்னை நீ மறைச்சுக்கப் போறே'ன்னு மனசு கேட்க ஆரம்பிச்சது. பெரிய மருத்துவமனையில சிகிச்சை எடுத்தேன். தலைமுடி வளர்ந்தது... கூடவே மீசையும், தாடியும்!

மருந்துகளை நிறுத்தினேன்; மறுபடியும் வழுக்கை. 'விக்' மாட்டிக்க ஆரம்பிச்சேன். 'எப்போ கழன்று விழுமோ'ன்னு மனசுல எப்பவும் ஒரு பயம். ஒருநாள்...'நமக்கு மட்டுமே கடவுள் தந்த வரத்தை நாம எதுக்காக மறைக்கணும்'னு ஒரு எண்ணம்; 'விக்'கை கழற்றி எறிஞ்சேன். என் மனசோட அழகு முகத்துல ஜொலிச்சது; 'பெண்ணுக்கான அழகு எது'ன்னும் எனக்குப் புரிஞ்சது.






      Dinamalar
      Follow us