/
வாராவாரம்
/
கண்ணம்மா
/
நிழல் பேசும் நிஜம்
/
கும்பளங்கி நைட்ஸ் (மலையாளம்)
/
கும்பளங்கி நைட்ஸ் (மலையாளம்)
PUBLISHED ON : செப் 29, 2019
எதுவுமே இல்லாத வீடு அது; ஆனா, எல்லாமே நிறைஞ்சிருக்கிற மாதிரி அந்த நாலு பேரும் உணர்ந்தாங்க.
ஷாஜி - குடும்பத்துல மூத்தவர்; பகல் முழுக்க துாங்குறதும், துாங்கி முழிச்சதும் தேங்காயும் வெல்லமும் சாப்பிடுறதும் தான் இவரோட தொழில்!
போனி - ஷாஜிக்கு இளையவன்; நடனத்துல நல்ல ஈடுபாடு; ஆனா, வாய் பேச முடியாது.
பாபி - இவன் மூணாவது; தலை நிறைய முடி; ஷாஜிக்கு செம போட்டியா இருக்குற சோம்பேறி.
பிராங்கி - கடைக்குட்டி; கால்பந்து வீரன். மூத்த அண்ணனும், மூணாவது அண்ணனும் ஏன் இப்படி இருக்காங்கங்கிற வருத்தம் இவனுக்கு நிறைய உண்டு.
என் கணவர் இறந்து போன சூழல்ல... எதுவுமே இல்லாத ஷாஜி வீட்டுக்கு, ஆதரவு தேடி கைக்குழந்தையோட வந்தேன். ஆனா, அவங்க சுதந்திரத்துக்கு நான் இடைஞ்சலா இருக்கிறதா ஒரு உணர்வு. நான் கிளம்பணும்னு முடிவெடுத்த சூழல்ல பாபி சொன்னான்...
'எங்க நாலு பேருக்கும் ஒரு சகோதரியா நீங்க இங்கேயே இருந்திடுங்களேன்!'
நான் மறுக்கலை; 'எதுவுமே இல்லாத வீட்டுல எல்லாமுமா இருக்க ஒரு பெண்ணால தான் முடியும்'னு அவங்களுக்கு தோணியிருக்கு. 'சரி'ன்னு நான் தலையாட்டிட்டேன். ஏன்னா...
சில உண்மைகள்... மதிப்பிற்குரியவை!

