தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/கண்ணம்மா/நிழல் பேசும் நிஜம்/மகரிஷி (தெலுங்கு)

மகரிஷி (தெலுங்கு)

மகரிஷி (தெலுங்கு)


PUBLISHED ON : ஆக 18, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 18, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'அவமானங்களை சந்திச்சுட்டு வந்து, அவர் மாதிரி என்னால சிரிச்சுட்டு இருக்க முடியாது!' - அப்பாவோட அலுவலக அவமானங்களை உணர்ந்த கணத்துல, அவர் முகத்துக்கு நேரா ரிஷி இப்படித்தான் விஷம் கக்குவான்.

அவனுக்கு ஜெயிக்கணும்; இந்த உலகத்தை ஆளணும்; இதுதான் குறிக்கோள். அவனைப் பொறுத்தவரை, 'வெற்றி'ங்கிறது இலக்கு கிடையாது; அது ஒரு பயணம்.

நினைச்சபடியே ரிஷி சாதிச்சான்.

அமெரிக்கா போனான். அங்கே அவன் வாழ்க்கை சந்தோஷமா இருந்த கணத்துல, அந்த தகவல்...

அவங்க அப்பா தவறிட்டார். இந்தியா வந்த ரிஷி, அவங்க அப்பா அவனுக்காக எழுதி வைச்சிருந்த கடிதத்தை வாசிச்சான்.

'அப்பா மாதிரி இருந்துடக் கூடாதுன்னு, என் வாழ்க்கை உன்னை யோசிக்க வைச்சிருக்கு பாரு; அந்தவகையில, நான் ஜெயிச்சுட்டேன்; ஐ மிஸ் யூ டா!'

- உண்மை சுட்டதினால, ரிஷி கண்கள்ல கண்ணீர். 'உன் அப்பா தோற்கலைடா ரிஷி' அம்மா இப்படி சொன்னதும், உடைஞ்சு அழுதான்.

'அர்த்தமுள்ள வாழ்க்கைக்கு பணம் அவசியமில்லை'ங்கிற உண்மையை ரிஷிக்கு உணர்த்தி, அவனை மாமனிதனா மாத்தி எனக்கு தந்தாங்க அவனோட அம்மா.

ஆண் பிள்ளையை பெற்ற ஒவ்வொரு தாய்க்குமான கடமை இது!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us