தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/கண்ணம்மா/நிழல் பேசும் நிஜம்/மாம் (ஹிந்தி)

மாம் (ஹிந்தி)

மாம் (ஹிந்தி)


PUBLISHED ON : ஏப் 28, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 28, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆர்யா என்னை, 'மேடம்'னு தான் கூப்பிடுவா; அவளை பொறுத்தவரை, நான் அவ அப்பாவோட இரண்டாவது மனைவி மட்டும் தான்; இறந்து போன அவ அம்மாவுக்கு நான் மாற்று கிடையாதுங்கிறது அவ நம்பிக்கை!

அன்னைக்கு... என் கையில இருந்த துப்பாக்கி அவனை குறி பார்த்து இருந்தது; நாலு பேர்ல மிஞ்சியிருந்த கடைசி மிருகம்.

'ம்ம்ம்... சுடுங்க தேவகி... ஆர்யாவை சிதைச்சவனுக்கு உங்க கையால தண்டனை கொடுங்க!' - விசாரணை அதிகாரி பிரான்சிஸ் கத்தினார்.

'ஏய்... ஏய்... சார்லஸுக்கு விஷம் வைச்சு கொன்னதும், அந்த பழியை மொஹித் மேல போட்டு ஜெயிலுக்கு அனுப்பினதும், பாபுராம் ஆணுறுப்பை அறுத்து கொன்னதும் இவ தான்... இவ தான்!' - உயிர் பயத்துல அலறுச்சு மிருகம்.

'தெரியும்டா; தேவகி... இப்ப முடியாம போனா எப்பவும் முடியாது; தயவுசெய்து சுடுங்க!' - பிரான்சிஸ்.

என்னால அவனை சுட முடியலை; கை நடுங்குது; அப்போ தான், என் பக்கவாட்டுல இருந்து அந்த குரல்...

'அம்மா...'

ட்ரிக்கரை விடாம அழுத்தினேன்; குண்டுகள் தீர்ந்ததுக்கப்புறமும்... டப்... டப்... டப்... ட்ரிக்கரை அழுத்திட்டே இருந்தேன். அந்த மிருகம் அடங்கினதும், கிட்டே வந்து ஆர்யா சொன்னா...

'லவ் யூ மாம்!'

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us