தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/கண்ணம்மா/நிழல் பேசும் நிஜம்/நிழல் பேசும் நிஜம் - ஹெலன் (மலையாளம்)

நிழல் பேசும் நிஜம் - ஹெலன் (மலையாளம்)

நிழல் பேசும் நிஜம் - ஹெலன் (மலையாளம்)


PUBLISHED ON : பிப் 26, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 26, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வேஷ்டியை மடிச்சு கட்டி வீட்டு வாசல்ல நின்னுட்டு இருந்தார் அப்பா. முகத்துல அவ்வளவு சந்தோஷம். பார்த்ததுமே எனக்கு புரிஞ்சு போச்சு... ஏதோ தப்பு பண்ணி இருக்கார்னு!

நெருங்கி வந்து அவர் முகம் பார்த்தேன்; சிரிச்சார். முகத்தை கிட்டே கொண்டு வரச் சொன்னேன். தலையை நீட்டினார். காதுல சொருகி வைச்சிருந்த சிகரெட்டை எடுத்து, 'என்னது இது...'ன்னு கேட்டேன். 'தப்புதான்மா'ன்னு தலை குனிஞ்சார்; 'இனிமே புகைக்க மாட்டேன்'னு சத்தியம் பண்ணினார்.

இந்த இடத்துல அவருக்கு நான் மகள் இல்லை... அம்மா!

'நீ எந்த ஒரு வேலைக்கும் போகலை; உனக்கு பொறுப்பு இல்லை; என் கூட இனிமே பேசாதே அஸார்'னு சொல்லிட்டேன். போன் பண்ணி மன்னிப்பு கேட்டான். நேர்ல வந்து கெஞ்சினான். நான் இறங்கி வரலை. இப்போ... சென்னையில கிடைச்ச வேலையில சேர கிளம்பிட்டான்.

இந்த இடத்துல அஸாருக்கு நான் காதலி இல்லை... அம்மா!

'மால் வாசல்ல காவலுக்கு நிற்கிற என்னை ஒரு பொருட்டாவே மதிக்காம, ஆயிரக்கணக்கான பேர் கடந்து போவாங்க சார்; ஆனா, உங்க பொண்ணு மட்டும்தான் என்னை மனுஷனா நினைச்சு ஒரு புன்னகையை தந்துட்டுப் போவாங்க!'ன்னு, அந்த செக்யூரிட்டி தாத்தா அப்பாகிட்டே சொல்லி இருக்கார்.

இந்த இடத்துல அவருக்கு நான்... யார்?

குணத்தால் மணக்கும் ஒரு பெண்... தேவதை... ஹெலன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us