/
வாராவாரம்
/
கண்ணம்மா
/
நிழல் பேசும் நிஜம்
/
நிழல் பேசும் நிஜம் - ப்ரோச்சவரேவருரா (தெலுங்கு)
/
நிழல் பேசும் நிஜம் - ப்ரோச்சவரேவருரா (தெலுங்கு)
PUBLISHED ON : டிச 04, 2019

அம்மாவுக்கு பிடிச்ச மாதிரியே எனக்கு பரதம் பிடிக்கும். ஆனா, அப்பாவுக்கு அம்மாவை பிடிக்காததால, நான் பரதத்தை நேசிக்கிறதும் அவருக்கு பிடிக்காது.
அம்மா தவறிட்டாங்க. அதுக்கப்புறம், எனக்கு படிப்பு சரியா ஏறலை. தன்னோட நண்பர்கிட்டே அப்பா என்னை டியூஷனுக்கு அனுப்பினார். வந்திருக்கிற பொண்ணு தன் நண்பனோட மகள்னும் பார்க்காம, அந்த ஆள் என்கிட்டே தப்பா நடந்துக்க முயற்சி பண்ணினான்.
அப்பாகிட்டே சொன்னேன். நான் டியூஷனை தவிர்க்க முயற்சி பண்றதா என்னை திட்டினார்.
அவ்வளவு தான்... மனசு உடைஞ்சிருச்சு; வீட்டை விட்டு வெளியேறிட்டேன்.
ஆனா, நான் நினைச்ச மாதிரியில்லை உலகம்! என்னை காப்பாத்திக்க நிறையவே போராட வேண்டியிருந்தது. அப்போ தான், என் நண்பன் சொன்னான்...
'அழுகையோட எடுக்குற எந்த முடிவும் தப்பா தான் இருக்கும்னு இப்போ உனக்கு புரிஞ்சிருக்கும்.
போயிடு மித்ரா; நம்ம வீடு தான் நமக்கு பாதுகாப்பு! வெளி உலகத்துல போராடி உன்னை நீயே காப்பாத்திக்க முடியுறப்போ, ஏன் உன் வீட்டுல உன் அப்பாகிட்டே உன்னை புரிய வைக்க முடியாதுன்னு நினைக்கிறே; அதுக்கு முயற்சி பண்ணு; கிளம்பு!'
சில நிமிடங்கள்... என்கிட்டே கனத்த மவுனம். பிறகு, தீர்க்கமா சொன்னேன்...
ரொம்ப நன்றி நண்பா!

