sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

கண்ணம்மா

/

நிழல் பேசும் நிஜம்

/

நிழல் பேசும் நிஜம்!

/

நிழல் பேசும் நிஜம்!

நிழல் பேசும் நிஜம்!

நிழல் பேசும் நிஜம்!


PUBLISHED ON : ஆக 09, 2020

Google News

PUBLISHED ON : ஆக 09, 2020


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மனசுக்கு பிடிச்சவன் வாசல்ல நிற்கிறான்; அவனோட போயிடணும்னு பெட்டியோட நான் வீட்டு வாசலை தாண்டினப்போ, அப்பா நெஞ்சுல அடிச்சுட்டு அழுதார்.

'பிறக்கிற குழந்தை நல்லபடியா பேசிடுச்சுன்னா, அதைப் பார்த்து நீ ஏங்கிப் போயிருவே'ன்னு, ரெண்டாவது குழந்தை வேண்டாம்னு சொன்னவருடி உங்கப்பா; அவரையா துாக்கி எறிஞ்சுட்டுப் போறே?' - அப்பாவின் மனக்குமுறலை அம்மா கொட்டினாள். அன்னைக்கு பாசம் ஜெயிச்சிடுச்சு.

இதோ... பத்து வருஷம் ஆச்சு.

எனக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை. ஆனாலும், மனசுக்குள்ளே இருந்து அவனை முழுமையா என்னால துாக்கிப் போட முடியலை.

ராஜீவ்; எனக்குள்ளே அவன் வாழ்றது தெரிஞ்சு அப்பப்போ வெடிச்சாலும், என் மனசை உணர்ந்தவர்; என் உணர்வுகளுக்கு மரியாதை தர்றவர்; என் கணவர்.

அவன் இறந்த தகவல் வந்தன்னைக்கு, துபாய்ல இருந்து என்னை இந்தியாவுக்கு அழைச்சுட்டு வந்தார்.

என்னோட துரதிருஷ்டம்... நான் வர்றதுக்குள்ளே அவனை மண்விழுங்கிடுச்சு.

'சுஜாதா... நீ அவனை பார்க்கணும்னா, சவப்பெட்டியை நான் திறக்கிறேன்' - ராஜீவ் உறுதியா சொன்னார்; அவர் தோள் சாய்ஞ்சு அழுதேன். மனசுல ஒரு நிம்மதி; பிறந்ததுல இருந்து வாய் பேச முடியாத என்னால, என் மனசை ரெண்டு ஆண்களுக்கு புரிய வைச்ச நிம்மதி!

அன்பை உணர்த்த வார்த்தைகள் எதற்கு?

படம்: சூபியும் சுஜாதாயும் (மலையாளம்)






      Dinamalar
      Follow us