
குழந்தை பெற்றுக் கொள்வது சமூகக் கடமையா; சொந்த விருப்பமா?
இந்த கேள்விக்கான பதில் ஹபீஸை சந்திக்கிறவரைக்கும் எனக்குத் தெரியாது. நான் சாரா; ஜீவன் என் கணவன்.
அவசியமில்லாத நேரத்துல நான் கர்ப்பமாகி இருந்தேன். மகப்பேறு மருத்துவர் ஹபீஸ் எதிர்ல ஒருவித தயக்கத்தோடு நானும் ஜீவனும் உட்கார்ந்திருந்தோம்; எங்க ரெண்டு பேரையும் ஆழமா பார்த்துட்டு அவர் பேச ஆரம்பிச்சார்.
'ஜீவன்... நீங்க எம்.பி.ஏ., நுழைவுத் தேர்வுல தேர்ச்சி பெற நல்ல கோச்சிங் சென்டர் போய் படிச்சிருக்கீங்க. ஆனா, வாழ்க்கையோட முக்கியமான முடிவான குழந்தை பெத்துக்கிறதுல என்னென்ன முன் தயாரிப்புகள்ல ஈடுபட்டீங்க; பெற்றோராகும் தகுதிக்குன்னு சில முன் தயாரிப்புகளும், விட்டுக்கொடுக்க வேண்டிய விஷயங்களும் இருக்கு!
'சாரா... சினிமா இயக்கணும்ங்கிறது உன் கனவு. ஒரு சினிமாவை உருவாக்க பலமுறை ஆலோசனை செய்ற நீங்க, குழந்தை வேணுமா, வேண்டாமான்னு ஆலோசனை பண்ணி முடிவெடுக்குறீங்களா?
'இதோ பார்... 'குழந்தை பெத்துக்க நாம தயார்'னு நீ உணரும்போது மட்டும் சம்மதம் சொல்லு. ஏன்னா... பெத்து தர்றது உன் உடம்பு; அதனால, முடிவும் உன்னோடதாத்தான் இருக்கணும்!'
மருத்துவர் ஹபீஸ் மூலமா எனக்கு பதில் கிடைச்சிடுச்சு!
படம்: சாரா'ஸ் (மலையாளம்)

