
மன்னிப்பு எப்போது பிறக்கும்?
நான் பால் மத்தாய்; ஷெரின் என் மகள்; ஆலன் என் மருமகன். சாலை விபத்துல என் மகள் இறந்த அதே வருஷத்துல சினேகாவை கல்யாணம் பண்ணிக்கிட்டான் ஆலன். அன்னைக்கு, விபத்துல அடிபட்டு துடிதுடிக்க கிடந்த என் மகளை பார்த்தும் ஆலன் கடந்து போனதுக்கு காரணம், சினேகா உடனான காதல்னு எனக்கு தெரிய வந்தது.
என் மகளுக்கு நடந்த விபத்தை தனக்கு சாதகமா பயன்படுத்திக்கிட்ட ஆலனோட முகத்திரையை கிழிச்சு, அவனைப் பழிவாங்க சினேகாவை சந்திக்கப் போனேன். கர்ப்பமா இருந்த சினேகா அதீத ரத்தப்போக்கால வீட்டுல மயங்கி கிடந்தா! அவளை அப்படியே விட்டுட்டுப் போக நினைச்ச அந்த சந்தர்ப்பத்துல, என்னை நான் ஆலனா உணர்ந்தேன்; உடனே என் மனசை திருத்திக்கிட்டு சினேகாவை மருத்துவமனையில சேர்த்தேன்.
தேடி வந்த ஆலன் சொன்னான்...
'அன்னைக்கு ஷெரினை காப்பாத்த திரும்பி போனேன் மாமா!'
சினேகாவை காப்பாத்துன சூழல் தந்த அனுபவத்துல நான் சொன்னேன்... 'எனக்கு தெரியும்ப்பா!'
நான் தண்டிக்க நினைச்சவனோட சூழலை எனக்கும் ஏற்படுத்தி எனக்குள்ளே மன்னிக்கிற குணத்தை விதைச்ச சினேகாவை நான் இப்போ எப்படி கூப்பிடுறேன் தெரியுமா... 'மகளே...'
படம்: காணெக்காணெ (மலையாளம்)

