
நான் வழக்கறிஞர் மாதவி; அரசு வழக்கறிஞரான எபின் மேத்யூ என் கணவர்.
'கவுதம் என்னை விரும்புறான்னு நினைச்சு தான் என்னை அவனுக்கு கொடுத்தேன்'னு சொல்ற அனுஷாவோட சார்பா நீதிமன்றத்துல எபின்.'அனுஷாவை நான் பயன்படுத்திக்கலை; அது தற்செயலான நிகழ்வு'ன்னு சொல்ற கவுதமோட சார்பா நான்!
'யாரோட வாதம் ஜெயிக்கும்'ங்கிற எங்களுக்கு இடையிலான போட்டி, மெல்ல மெல்ல 'ஈகோ' யுத்தமா மாறுச்சு. வாதங்கள்ல முன்வைக்கப்படுற கருத்துக்களை, தனிப்பட்ட தாக்குதலா பரஸ்பரம் எடுத்துக்க ஆரம்பிச்சோம். 'செல்போன்' திரையில வர்ற பெயரை தற்செயலா பார்க்குற மாதிரி இரண்டு பேரும் நடிக்கத் துவங்கினோம்.
எங்களுக்கு இடையில பேச்சு அறுந்தது. இந்த சூழல்ல தீர்ப்பு தேதி அறிவிப்பும் வந்தது. அப்போதான், 'அனுஷாவுக்கும் கவுதமுக்கும் இடையில இருந்தது புரிதல் பிரச்னை'ங்கிறது எங்க பார்வைக்கு எட்டுச்சு; அதே தவறை நாங்க பண்ணிட்டு இருக்குறதும் புரிஞ்சது!
சின்ன விஷயத்துக்காக உங்க இணையரை நீங்க மட்டம் தட்டி பேசுறது, உறவினர்களுக்கு மத்தியில இணையரை விட்டுக் கொடுக்குறது, 'திறமையில உன்னைவிட நான் மேல'ன்னு காட்டிக்கிறது... இப்படி ஏதோவொரு காரணத்தாலதான் கணவன் - மனைவி உறவுல விரிசல் ஏற்படுது.
இதை அனுஷாவும், கவுதமும் எங்களுக்கு உணர்த்தினாங்க; நான் உங்களுக்கு உணர்த்திட்டேன்.
படம்: வாஷி (மலையாளம்)

