sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

கண்ணம்மா

/

நிழல் பேசும் நிஜம்

/

நிழல் பேசும் நிஜம்

/

நிழல் பேசும் நிஜம்

நிழல் பேசும் நிஜம்

நிழல் பேசும் நிஜம்


PUBLISHED ON : ஜன 01, 2023

Google News

PUBLISHED ON : ஜன 01, 2023


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

என் பேரு மதி, வயசு 28; கொடைக் கானல் போயிருந் தப்போ மூணு பேர் என்னை கடத்தி பாலியல் பலாத் காரம் பண்ணி, அதை வீடியோ எடுத்து பரப்பிட்டாங்க!

'இப்படி பாதிக்கப்பட்ட மனசுல, நடந்ததை வெளியே சொல்ல முடியாத விரக்தியும், பழி உணர்ச்சியும் இருக்கும்; 'நம்மால எதுவும் செய்ய முடியலையே'ங்கிற கோபமும், குற்றவுணர்ச்சியும் சுய வெறுப்பை உண்டு பண்ணும்; இதனால தற்கொலை எண்ணம் கூட வரலாம்!' - இது, மனநல மருத்துவர் என்கிட்டே சொன்னது!

'பாதிக்கப்பட்ட தரப்புக்கு உடனடியா வினையாற்றத் தோணும். அது முடியாதபட்சத்துல, சலிப்பு ஏற்பட்டு எதிர்ப்பை கை விட்டிருவாங்க; இம்மாதிரியான வீடியோவுக்கு பயந்து சில பெண்கள் தற்கொலை பண்ணிக்கிறாங்க!' - இது, நீதிபதி சொன்னது!

'தப்பு பண்ணினவங்க என் உடம்பை வைச்சே என்னை மிரட்டுறாங்க. என் உடம்பு எனக்குதானே ஆயுதமா இருக்க முடியும். பயந்து தற்கொலை பண்ணிக்கிறது பொண்ணுங்க தப்பில்லை; 'முழங்கால் தெரியக்கூடாது; இடுப்பு தெரியக்கூடாது'ன்னு சொல்லிச் சொல்லி, தன் உடம்பை தனக்கான பலவீனமா அவளை பார்க்க வைச்சிட்டாங்க!

'உயிரைவிட மானம் முக்கியம்னு சொல்றதெல்லாம் சரி; ஆனா, அந்த மானம் எதுல இருக்குன்னு சொல்றதுலதான் குழப்பம். என் மானம் நான் வாழ்ற வாழ்க்கையில இருக்கு!' - இதெல்லாம் நான் சொன்னது!

உங்க மானம் எதுல இருக்கு?

படம்: அனல் மேலே பனித்துளி






      Dinamalar
      Follow us