
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு...
'என்னுடைய நேரடி கண்காணிப்பில் இயங்கும்'னு நீங்க துவக்கி வைச்ச 'மக்களுடன் முதல்வர்' திட்ட சிறப்பு முகாம்ல என் மனுவுக்கு கிடைச்ச மரியாதை என்ன தெரியுமா; அதுக்கு முன்னாடி என் குறை என்னன்னு தெரிஞ்சுக்கோங்க...
'என்னோட 85 வயது கணவரை டிசம்பர் 21, 2023 வேங்கைவாசல் ஊராட்சி அலுவலகம் பக்கத்துல மாடு முட்டிருச்சு. வலதுகையில கொம்பு குத்தி கிழிச்சு உயிருக்கு ஆபத்தான நிலையில சென்னை, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில சிகிச்சையில இருந்தவர் ஜனவரி 3, 2024 அன்னைக்கு இறந்துட்டார். ஆறுதல் சொல்லக்கூட மாநகராட்சி தரப்புல இருந்து யாரும் வரலை! ஆனா, இதேமாதிரியான திருவல்லிக்கேணி சம்பவத்துக்கு மாநகராட்சி ஆணையர் நேர்ல போய் ஆறுதல் சொன்னார்.
யானைக்கால் வியாதியோட அவதிப்படுற நான், இந்த ஜனவரி 6ம் தேதி தாம்பரம், இந்திரா நகர் அகரம் பிரதான சாலை மண்டபத்துல நடந்த 'மக்களுடன் முதல்வர்' முகாமுக்கு போனேன். 'நிவாரண கோரிக்கைக்கு எல்லாம் தாலுகா அலுவலகத்துக்கு தான் போகணும்'னு சொல்லி என் மனுவை அதிகாரிகள் வாங்க மறுத்துட்டாங்க!
அய்யா... 'நீங்கள் நலமா?'ன்னு உங்க அரசு எப்போ என்கிட்டே கேட்கும்?
- டிசம்பர் 21, 2023ல் சாலையில் திரிந்த மாடு முட்டி பலியான முதியவர் மணியின் 80 வயது மனைவி இந்திரா, மாடம்பாக்கம், செங்கல்பட்டு.

