sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 31, 2026 ,தை 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

கண்ணம்மா

/

வானமே எல்லை

/

விடியும் வரை கிறுக்குவேன்

/

விடியும் வரை கிறுக்குவேன்

விடியும் வரை கிறுக்குவேன்

விடியும் வரை கிறுக்குவேன்


PUBLISHED ON : டிச 01, 2024

Google News

PUBLISHED ON : டிச 01, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நவம்பர் 25: பிழையாக பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்துக்கு, 'மைக் பிரச்னை' என்ற துணை முதல்வரது விளக்கத்தை ஏற்றுக்கொண்ட என் திராவிட மனம், 'எல்.ஐ.சி., இணையதளம் ஹிந்தியில் மாறி மீண்டதற்கு தொழில்நுட்ப கோளாறு காரணம்' என்பதை ஏற்கவில்லை!

நவம்பர் 26: 'கோழிப்பண்ணை செல்லதுரை போன்ற குறைகளோடு கூடிய படைப்பை பாராட்டுவது நற்பண்பு. அதை நமக்குரியது என ஏற்றுக் கொள்ளக்கூடாது!' - இயக்குனர் சீனு ராமசாமிக்கான கரு.பழனியப்பனின் இப்பதிவு, நேற்று முளைத்த அரசியல் வாரிசுக்கும் பொருந்தும்!

நவம்பர் 27: 'எனது எல்லைக்குள் போதைப்பொருள் நடமாட்டம் இல்லை' என்று ஒவ்வொரு காவல் ஆய்வாளரும் உறுதிப்படுத்த வேண்டும் என ஆசைப்படும் முதல்வருக்கு, போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட அயனாவரம் காவலர் சொன்ன செய்தி என்ன?

நவம்பர் 28: 'திராவிட மாடல்' நல்லாட்சியின் சிறப்பை உணர்ந்த மக்கள், தனியார் மருத்துவமனை செல்வதை தவிர்த்து அரசு மருத்துவமனைக்கு வருகிறார்களாம்; அமைச்சர் சொல்கிறார். 'சரி... அமைச்சர்கள் செல்வது எங்கே?' என கேட்பது அதிகப்பிரசங்கித்தனம்!

நவம்பர் 29: 'மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் இரண்டு கோடியே ஒன்றாவது பயனாளி விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கிறார்' என துல்லியமாய் சொல்லும் அரசிடம், 'டாஸ்மாக்' பறித்த உயிர்களின் எண்ணிக்கையும் நிச்சயம் இருக்கும்; நாம் கேட்கவில்லை... அவ்வளவுதான்.






      Dinamalar
      Follow us