
'எதிலும் முதன்மை யாய் இரு' எனும் அறிவுரையை பின் பற்றும் தனலட்சுமி வாசுதேவன், சென்னை கிழக்கு கடற்கரை சாலை உத்தண்டியில் உள்ள 'குடோஸ் கை வினைப்பொருட்கள் அங்காடி'யின் உரிமையாளர்.
நீங்கள் படைக்கும் தஞ்சாவூர் ஓவியம் பற்றி...
ப்ளைவுட்டில் காடா துணி ஒட்டி, 'டிரேஸ்' செய்த ஓவிய மாதிரியில் கற்கள் பதித்து, அதன்மேல் சுண்ணாம்பு பொடி/ கருவேலம் பசை கலவை ஊற்றி, வண்ணங்களால் மெருகேற்றி, ஜெய்ப்பூர் 22 காரட் தங்க தாள்களை ஒட்டி, தேக்குமர சட்டங்களுக்குள் படைப்பை பொருத்துகிறேன்!
தஞ்சாவூர் ஓவியங்களோடு ஜெய்ப்பூர் பிச்வாய் ஓவியம், கேரள மியூரல் ஓவியம், அருணாச்சல பிரதேச மூங்கில் ஓவியம், காரைக்குடி கண்ணாடி ஓவியங்களும் இங்குண்டு. மேலும், இந்திய கலைஞர்களின் கைவண்ணத்தில் மண்ணில் செய்த காளை, மூன்றடி உயர புத்தர், அம்பாரி யானை, புதுச்சேரி விநாயகர், 10 அடி உயர வாஸ்து குதிரை மற்றும் வாரணாசி தோல் குதிரை, ஜெய்ப்பூர் மீனாகாரி வேலைப்பாடுடன் கூடிய உலோக சிலைகளும் இருக்கின்றன!
களிமண்ணால் ஆன உருவங்களை சுவற்றில் பதிக்கும் 'டெரகோட்டா வால் ஆர்ட்' முயற்சியிலும், ஏற்றுமதியிலும் சாதிப்பது என் இலக்கு.
வாழ்த்துகள் தனலட்சுமி!
- 98400 79659
சிறப்பு பொருள்: மூதாதையர், குலதெய்வ உருவங்களோடு கூடிய தஞ்சை ஓவியம் - ரூ. 12 ஆயிரம் முதல்

