
உயிரற்ற பொருட் களுக்கு 'ரெசின்' கலை மூலம் உயிரூட்டுபவர் 26 வயது தனப்ரியா. சென்னை, சூளைமேடு இல்லம் இவரது கற்பனைக்கான கலைப்பட்டறை!
இதெல்லாமா...?
பின்னே... காதல் சொன்ன ரோஜாப்பூ, சாக்லேட் உறை, தாலிக்கயிறு, சீமந்த வளையல், தொப்புள்கொடி, பால் பல்லுன்னு அன்பின் அடையாளங்களை அள்ளிட்டு வர்றவங்களுக்கு, அதையெல்லாம் 'ரெசின்' போட்டோ பிரேம், கடிகாரம், பெயர்பலகையில பதிச்சு தர்றேன்!
'ரெசின் கலை' பற்றி...?
பூக்கள், நட்சத்திரம் உள்ளிட்ட 500க்கும் மேலான வடிவங்கள்ல சிலிக்கான் மோல்டு, வட்ட/ சதுர/ செவ்வக வடிவ அக்ரலிக், உலோக, மரச்சட்டங்கள்தான் இதற்கான அடித்தளம்!
கண்ணாடியா மின்னுற 'ரெசின்' திரவத்தை வண்ண மைகள் கலந்து மோல்டில் ஊற்றி, 'மாடர்ன் ஆர்ட்' நிலைக்கு மாற்றி, அது பத்து மணி நேரம் உலர்ந்தபின் அதன்மேல் விரும்பும் பொருள் பதித்து, வண்ண ரெசின் ஊற்றி உலர்த்தி, 'டிஜிட்டல்' புகைப்படங்கள், 'மெட்டாலிக் ஸ்டிக்கர்' எழுத்துக்களால் மெருகேற்றுவதே ரெசின் கலை!
'ரெசின் ஆர்ட்' அன்பளிப்புகளுக்காக பிரத்யேக அங்காடியை வழிநடத்தணும்ங்கிறது என் கனவு.
கனவு கைகூடட்டும்!
99628 91836
சிறப்பு படைப்பு: தம்பதியினரின் புகைப்படம் கொண்ட 'ரெசின்' கடிகாரம் - ரூ.800 முதல்