PUBLISHED ON : ஜூன் 02, 2024

* 'இண்டியா கூட்டணிக்கு அடித்தளமிட்டவர்னு சொல்லப்படுற நம்ம முதல்வர், 'முல்லை பெரியாறு, சிலந்தி ஆறு அணை விவகாரங்களால், கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசை கண்டித்து 'இண்டியா' கூட்டணியில் இருந்து தி.மு.க., விலகுகிறது'ன்னு சொல்லி கடைசி கட்ட தேர்தலுக்கு முன்னாடி பீதி கிளப்புவார்'னு நினைச்சேன்; ப்ப்ப்ச்ச்...
* 'அரசு துறையில ஒரு குற்றம் நிகழ்ந்தா தப்பு செய்தவரை மட்டும்தான் குற்றவாளியா பார்க்கணுமே தவிர, மொத்த துறையையும் தவறா பார்க்கக்கூடாது'ன்னு ஊட்டி வளர்க்கப்பட்ட நாங்க, 'ஒடிசா ஆலய பொக்கிஷ அறை சாவி தமிழகத்தில் இருக்கலாம்'னு பிரதமர் சொன்னதை 'தமிழர்களுக்கான அவமானம்'னு எப்படிய்யா நினைப்போம்!
* ஆம் ஆத்மி பெண் எம்.பி., தாக்குதல் தொடர்பான விசாரணைக்கு காத்திருப்பதை புகைப்படம் மூலம் சொன்ன டில்லி முதல்வர் கெஜ்ரிவாலின் குடும்பம், 'இதற்குமுன் அரசின் எந்த சேவையைப் பெற இப்படி பொறுமையாய் காத்திருந்தது' எனும் யோசனையை எனக்குள் துாண்டி விட்டது; இன்னும் என் யோசனை நீள்கிறது!
* 'மேடையேற்றிய மக்களுக்கும் சமுதாயத்துக்கும் ஒரு பிரச்னை வருகையில் கலைஞன் கோழையாகி விட்டால் சமுதாயமும் கோழையாகி விடும்'னு வி.சி.க., விருது விழா மேடையில உறுமுன நடிகர் பிரகாஷ்ராஜ், 'போதை பொருட்களால் தமிழகத்தில் நிகழும் குற்றங்கள்' பார்த்து எழுப்பின வீரம் ததும்பும் கேள்வி என்ன?
சொல்லு... செல்லம்!

