PUBLISHED ON : ஜூன் 30, 2024

'கள்ளக்குறிச்சியில் நிகழ்ந்திருப்பது பேரிடர் காலத்தில் கூட நிகழாத துயரம்; விஷச்சாராய விற்பனையை தடுக்கத்தவறிய ஆட்சி நிர்வாகத்திற்கு கடும் கண்டனம்'னு பொங்குன நடிகர் சூர்யாவோட அறிக்கையில, 'தி.மு.க., ஆட்சி, காவல் துறை, கள்ளச்சாராயம்'ங்கிற வார்த்தைகள் எல்லாம் இல்லவே இல்லை; கவனிச்சீங்களா?
'போட்டித் தேர்வுகளின் வினாத்தாள்கள் கசிந்துள்ள சூழலில், 'பிரதமர் மோடி அரசு மாணவர்களின் எதிர்காலத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது'ன்னு பதறுற ராகுல் காந்தி, 'நம்ம கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலிகளால பாதிக்கப்பட்டிருக்கிற இளம் பிஞ்சுகளைப் பார்த்தா எப்படி பதறுவாரோ'ங்கிற நினைப்பே பயங்கரமா இருக்கு!
கொலை, கொள்ளை நிகழ்வுகள் குறைஞ்சதா புள்ளி விபரம் வெளியானா, 'காவல் துறை மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகள் தான் இதற்கு காரணம்'னு அரசு மார் தட்டுது. இந்த பெருமை தெரியாம, 'கள்ளச்சாராய சாவு போன்ற சம்பவங்களை அரசால் மட்டுமே கட்டுப்படுத்த முடியாது'ன்னு நடிகர் கமல் சொல்றதை ஏத்துக்க முடியலை!
'கள்ளக்குறிச்சி நிகழ்வுக்கெல்லாம் முதல்வர் பதவி விலகத் தேவைஇல்லை; விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் கள்ளச்சாராய விவகாரம் எடுபடாது'ன்னு தி.மு.க., நிர்வாகி ஆர்.எஸ்.பாரதி இப்போ சொன்னப்போ, 'தமிழக மக்களை எப்போதும் யாராலும் ஏமாற்ற முடியாது'ன்னு நம்ம முதல்வர் அப்போ சொன்னதை நினைச்சுக்கிட்டேன்; சிரிச்சுக்கிட்டேன்!