PUBLISHED ON : ஏப் 10, 2026 08:42 PM

போலந்து நாட்டின் ஒட்ரெபஸி பகுதியில் தற்போது ஒரு வேடிக்கையான சம்பவம் நடந்து வருகிறது.அது அங்குள்ள தவளைகள் ஆயிரக்கணக்கில் கூட்டம் கூட்டமாக தாங்கள் வாழும் நிலப்பகுதியில் இருந்து இடம் பெயர்ந்து சுமார் 3 கிலோமீட்டர் துாரம் உள்ள நீர்நிலைகளை நோக்கி இனப்பெருக்கத்திற்காக செல்கின்றன.

தவளைகளுக்கு அதே இனத்தை சேர்ந்த தேரைகளுக்கும் ஒரு பழக்கம் உண்டு அவை என்னதான் நீர் நிலைகளை ஒட்டிய பகுதிகளில் வாழ்ந்தாலும் முட்டையிடுவதற்கு இன்னோரு நீர் நிலைக்குதான் செல்லும் அங்கு சென்று முட்டையிட்டுவிட்டு பின் மூன்று வார இடைவெளியில் திரும்பிவிடும்.
இந்த உறக்கம் கலைந்ததும் பெரும்பாலும் முட்டையிடுவதற்காக நீர்நிலைகளை நோக்கி நகரும். இந்த இடப்பெயர்வு காலங்களில் தேரைகள் பாதுகாப்பாகச் சாலையைக் கடக்க தன்னார்வலர்கள் உதவுவார்கள் அல்லது சாலைகளின் அடியில் பிரத்யேகமாக 'தேரை சுரங்கப்பாதைகள்'அமைக்கப்பட்டிருக்கும்.
உயிரினங்களின் வாழ்க்கையில்தான் எத்தனை எத்தனை அதிசயங்கள்.
-எல்.முருகராஜ்.

