sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நிஜக்கதை

/

பகிரப்படுவது அன்னமல்ல அன்பு...

/

பகிரப்படுவது அன்னமல்ல அன்பு...

பகிரப்படுவது அன்னமல்ல அன்பு...

பகிரப்படுவது அன்னமல்ல அன்பு...


PUBLISHED ON : ஜூன் 29, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : ஜூன் 29, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

Image 1287578சென்னை ராயப்பேட்டை பாரதி சாலையில் உள்ள ஸ்ரீ அன்ன போஜனம் மெஸ் என்ற அந்த சிறிய மாடி ஒட்டலின் குறுகிய படிக்கட்டுகள் வழியாக ஏழை எளிய ஜனங்கள் பலர் தத்தம் குழந்தைகளுடன் ஏறி சாப்பாட்டு மேஜையில் இடம் பிடித்தனர்.

அவர்களுக்கு தலைவாழை இடப்பட்டு அதில் அப்பளம்,வடை,பாயசத்துடன் அறுசுவை உணவு துவையல் பல வித பொரியலுடன் பரிமாறப்பட்டது.,சாப்பிட்டவர்கள் வயிறும் மனதும் நிறைய 'நல்லாயிரு தாயி' என்று சொல்லிவிட்டு கிழே இறங்கினர்.

அடுத்த குரூப் மேலே ஏறத்துவங்கியது..

அவர்களது பந்திக்கு உணவு வருவதற்கு முன் இப்படி இலவச உணவு வரும் கதையை சொல்லிவிடுவது நலம். Image 1287580பழம்பெரும் சுதந்திரப் போராட்ட தியாகி ராமசாமி((98),தற்போதும் திடமாக இருப்பவர்,இவரது மகள் செளந்திரவள்ளி, மற்றவர்களுக்கு உதவ வேண்டும் குறிப்பாக பசிப்பிணி போக்கவேண்டும் என்று சொல்லிச் சொல்லியே வளர்க்கப்பட்டவர்,அப்படியே வளர்ந்தவர்.,பின்னாளில் குடும்பத்தலைவியான பிறகும் கணவர் உதவியுடன் தனது அன்னதான தர்மத்தை முடிந்தவரை விடாமல் தொடர்ந்தவர்.

கோவிட் சமயத்தில் நீங்கள் நன்றாக சமைப்பீர்களாமே என்று நடிகர் தனுஷ் நிறுவனத்தில் இ/ருந்து தினமும் 50 பேருக்கு சாப்பாடு தயார் செய்யச் சொல்லி ஆர்டர் வந்த போது மறுக்காமல் ஏற்றுக்கொண்டார், அதையே தனது தொழிலாகவும் மாற்றிக் கொண்டார்.

வீட்டில் இருந்து உணவு சமைத்துக் கொடுத்தவர் தனது தொழிலை விரிவு செய்யும் வகையில் தற்போதுள்ள இடத்தில் மெஸ் நடத்திவருகிறார்.

தன் வயதான தந்தையின் உடலுக்கு, மனதிற்கு எப்படிப்பட்ட உணவு உகந்ததாக இருக்குமோ அந்த மாதிரி சைவ உணவையே சமைத்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கிவருகிறார்.

செயற்கை நிறமூட்டி இல்லாமல் சிறுதானிய உணவுகளின் துணையோடு, விதம்விதமான துவையலோடு இவர்தரும் அருமையான ஆரோக்கியமான மதிய சைவ உணவிற்கு நிறைய வாடிக்கையாளர்கள் உண்டு.

மெஸ்சின் மூலம் வரும் வருமானத்தில் ஒரு பங்கை எளியவர்களுக்கு செலவழிக்கவேண்டும் என்ற எண்ணத்தோடு, மாதத்தில் ஒரு நாள் ஏழை எளியவர்களை வரவழைத்து தலைவாழை இலை போட்டு இலவசமாக உணவு வழங்கிவருகிறார் அன்றைய தினம் வழக்கமான மெஸ் சாப்பாடோடு சிறுதானிய இனிப்பு,பாசிப்பருப்பு பாயசம் என கூடுதல் வகைகளும் உண்டு.

.அவர்கள் இலவசமாக சாப்பிடவந்தவர்கள் என்று நினைக்காமல் விருந்தினர்களைப் போல பாவித்து என்ன வேண்டும் என்று திரும்ப திரும்ப கேட்டு செளந்திரவள்ளி பரிமாறும் அழகே தனி.அவர்களுக்கு அவர் அன்னத்தை மட்டும் பகிரவில்லை தன் அன்பையும் சேர்த்து முழுமையாகப் பரிமாறுகிறார்..கணவர் முத்துக்குமார் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தாலும் மனைவியின் தொண்டுள்ளத்தோடு கூடிய சேவைக்கு முழுமையான ஆதரவு கொடுத்து துணை நிற்கிறார்.மாதம் ஒரு முறை நடத்தப்படும் இந்த சேவையை வாரம் ஒரு முறை நடத்தவேண்டும், சிறிய அளவில் கோவில்கட்டி அதில் நாள்தோறும் அன்னதானம் செய்யவேண்டும் என்பதே எனது கனவு என்று கூறும் செளந்திரவள்ளியின் கனவு நனவாகட்டும்.அவரது தொடர்பு எண்:7092055515.

-எல்.முருகராஜ்.






      Dinamalar
      Follow us