PUBLISHED ON : டிச 20, 2025 03:26 PM

மத்திய காசாவின் சவைடா பகுதியில் உள்ள ஒரு சிறிய கூடாரத்திற்குள், 23 வயதான யாசின் மரூப் படுத்திருக்கிறார். அந்தத் தற்காலிகக் கூடாரத்தின் வெப்பமும், புழுதியும் அந்த இளைஞனின் காயங்களை விடவும் அவனது மனதை அதிகமாகத் தாக்குகின்றன. கடந்த மே மாதம் இஸ்ரேலியத் தாக்குதலில் சிதறிய குண்டுகள், அவனது வாழ்க்கையை ஒரு நொடியில் தலைகீழாக மாற்றின.


யாசினின் காயங்கள் ஆறலாம், ஆனால் அவன் இழந்த அவயவங்கள் மீண்டும் வராது. அந்தச் சிறிய கூடாரத்தின் அமைதியில், அவ்வப்போது கேட்கும் குண்டுச் சத்தங்களுக்கு இடையே, யாசினும் அவனது குடும்பமும் ஒரு விடியலுக்காகக் காத்திருக்கிறார்கள். அந்த விடியல் அவர்களுக்கு அமைதியையும், மருத்துவ உதவியையும் கொண்டு வரும் என்பது மட்டுமே அவர்களின் இப்போதைய ஒரே நம்பிக்கை.
-எல்.முருகராஜ்

