தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நிஜக்கதை/மரணத்தின் விளிம்பை தொட்டு மீண்ட மாவீரன்

மரணத்தின் விளிம்பை தொட்டு மீண்ட மாவீரன்

மரணத்தின் விளிம்பை தொட்டு மீண்ட மாவீரன்

1


PUBLISHED ON : ஆக 01, 2026 06:11 PM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 01, 2026 06:11 PM

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அமெரிக்காவின் மொன்டானா மாநிலத்தில் உள்ள மிக உயர்ந்த மலையான 'கிரானைட் பீக்' பகுதிக்குச் சில நாட்களுக்கு முன் மலையேற்றப் பயணம் மேற்கொண்ட குழுவினருடன் 32 வயதுடைய செவிலியர் டேவிட் சிபால்டியும் உற்சாகமாகப் பயணித்துக் கொண்டிருந்தார். ஆனால், அந்தப் பயணம் ஒரு நொடிக் கவனச்சிதறலால் பதைபதைக்க வைக்கும் ஒரு கொடூர விபத்தாக மாறும் என்று யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை.

மலையின் உச்சியை நெருங்கும் அந்த இறுதி தருணத்தில், ஆபத்தான 'ப்ரோஸ்-டூ-டெத் பீடபூ' பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது டேவிட் எதிர்பாராதவிதமாகப் பாறையில் கால்நழுரி கீழே விழுந்தார்.Image 1604702விழுந்த வேகத்தில், அவர் கையில் இறுகப் பற்றியிருந்த 44 அங்குல எஃகு முனை கொண்ட மலையேற்றக் குச்சி எதிர்பாராதவிதமாக அவரது இடது அக்குள் பகுதிக்குக் கீழே உள்ள தசையைக் கிழித்து, உடலைத் துளைத்து மறுபுறம் முதுகின் வழியாக வெளியே நீட்டிக் கொண்டது. விவரிக்க முடியாத அந்தப் பேரதிர்ச்சியிலும், தன் உடலை ஒரு பெரிய இரும்புக்குச்சி ஊடுருவி நிற்பதை உணர்ந்தபோதும் அவர் நிலைகலங்கிப் போகவில்லை. அதிர்ஷ்டவசமாக, அந்த ஊடுருவல் அவரது முக்கிய உறுப்புகளையோ அல்லது நுரையீரலையோ தாக்கவில்லை என்றாலும், அந்த வலியும் காட்சியும் எவரையும் நிலைகலங்கச் செய்யக்கூடியவை. ஆனாலும், டேவிட் மயங்கிடவில்லை.

மருத்துவமனையில் காயப் பராமரிப்புப் பிரிவில் செவிலியராகப் பணியாற்றும் அனுபவம் அந்த ஆபத்தான கட்டத்தில் அவருக்குக் கைக்கொடுத்தது. மரண பயம் கவ்விக்கொள்ளும் அந்த விநாடியிலும் பீதியடையாமல், தனது மருத்துவ அறிவைக் கொண்டு உடனே காயத்தைத்தானே சுய பரிசோதனை செய்து கொண்டார்.

குச்சி எந்த முக்கிய உறுப்பையும் பாதிக்கவில்லை.ரத்தப்போக்கு அதிர்ஷ்டவசமாக மிகவும் குறைவாகவே உள்ளது.தன்னால் தொடர்ந்து இயல்பாக மூச்சுவிட முடிகிறது.Image 1604703இந்த உண்மைகளைத் தன் மனதிற்குள் கணக்கிட்டவர், அவசரமாக ஒரு கடினமான முடிவை எடுத்தார். உடலில் குத்தியிருக்கும் குச்சியை இப்போது பிடுங்கி எறிந்தால் அதிகப்படியான ரத்தப்போக்கு ஏற்பட்டு உயிர் பிரியக்கூடும் என்பதால், மருத்துவமனைக்குச் செல்லும் வரை அதைத் தொடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்.அரசு அல்லது அவசர உதவிக்காகக் காத்திராமல் தன் நண்பர்களின் உதவியுடன் தானே மலையிறங்கத் தீர்மானித்தார்.

உடலைத் துளைத்த இரும்புக்குச்சியுடன், பாறைகள் நிறைந்த கோரமான மேடு பள்ளங்களையும், உறைபனிச் சமவெளிகளையும் கடந்து சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக, 10 மைல்கள் (16 கி.மீ தொலைவு) நடந்து அடிவாரத்தை அடைந்தார். அந்தச் சித்திரவதையிலும் அவர் வெளிப்படுத்திய மன உறுதி மனிதர்களின் எல்லையற்ற வலிமைக்குச் சிறந்த சான்றாகும்.

அடிவாரத்தை அடைந்தவுடன் அங்கு காத்திருந்த ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு விரைந்தார். அங்கு மருத்துவர்கள் மேற்கொண்ட ஆபத்தான மற்றும் நுட்பமான அறுவை சிகிச்சை மூலம் அந்தக் குச்சி வெற்றிகரமாக அகற்றப்பட்டு அவர் முழுமையாக மீண்டு வந்தார்.

கடுமையான மரண ஆபத்தையும், உடல் வலியையும் தனது அசாத்திய மனத்துணிவாலும், மருத்துவ அறிவோடு எதிர்கொண்டு வெற்றி கண்ட டேவிட்டின் கதை, 'விடாமுயற்சி இருந்தால் மனிதனால் எத்தகைய கொடூரமான சூழ்நிலையையும் வெல்ல முடியும்' என்ற உண்மையை உலகிற்கு உரக்கச் சொல்கிறது.

-எல்.முருகராஜ்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us